கைதை எதிர்த்த முன்னாள் வழக்கறிஞருக்குச் சிறை

கைதை எதிர்த்த முன்னாள் வழக்கறிஞருக்குச் சிறை

1 mins read
9ce81959-55e7-4d11-be0a-852908c7d838
-

2017ஆம் ஆண்­டில் போதைப்­பொருள் பழ­கத்­திற்கு ஆளான முன்­னாள் வழக்­க­றி­ஞர் ஒரு­வர், தாம் கைது செய்­யப்­பட்­ட­போது மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­காரி ஒரு­வ­ரின் கழுத்­தில் கீறி­னார்.

அந்த 32 வயது ஆட­வர், மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­களை சாப­மிட்­ட­து­டன் அவர்­க­ளு­டன் போரா­டி­னார். அவரை ஒரு­வ­ழி­யாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குள் நான்கு அதி­கா­ரி­க­ளுக்­குக் காயம் ஏற்­பட்­டது.

அந்­தத் தரு­ணத்­தில் அந்த ஆட­வ­ருக்கு எச்­ஐவி தொற்று இருந்­தது.

அந்த ஆட­வ­ரால் கழுத்­தில் கீறப்­பட்ட அதி­காரி, ஆறு முறை எச்­ஐவி பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார். அவ­ருக்கு எச்­ஐவி தொற்று இல்லை எனக் கண்­ட­றி­யப்­பட்­டது.

அந்த அதி­கா­ரிக்கு 'ஹெப்­பட்­டைட்­டிஸ் பி' தடுப்­பூசி போடப்­பட்­டது. கல்­லீ­ரல் செயல்­பாடு, ஹெப்­பட்­டைட்­டிஸ் பி, சி, இதர நோய்­கள் உள்­ள­னவா என்­ப­தைக் கண்­ட­றிய அவர் ரத்­தப் பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டார்.

அந்த ஆட­வ­ருக்கு ஓராண்டு, 22 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. போதைப்­பொருள் உட்­கொண்­டது, போதைப்­பொ­ருள் உட்­கொள்­வ­தற்­கான உப­க­ர­ணங்­களை வைத்­தி­ருந்­தது, அர­சாங்க ஊழி­யர் தமது பணி­யைச் செய்­ய­வி­டா­மல் அவ­ருக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தது ஆகிய குற்­றங்­களை அந்த ஆடவர் ஒப்­புக்­கொண்­டார்.

அவ­ருக்­குத் தண்­டனை விதிப்­பதில் இது­போன்ற மூன்று குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில்­கொள்­ளப்­பட்­டன.

அந்த ஆட­வர் ஏறக்­கு­றைய ஐந்து ஆண்­டு­க­ளாக வழக்­க­றி­ஞ­ராக பணி­யாற்­றி­னார். ஆனால், வழக்­க­றி­ஞர் பதி­வேட்­டில் தற்போது அவரது பெயர் இல்லை என்­பது இணை­யத்­தில் தேடி­ய­தன் மூலம் தெரி­ய­வந்­து உள்ளது.

தொற்­று­நோய்­கள் சட்­டத்­தின்­கீழ், அந்த ஆட­வ­ரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. ஏனெ­னில், எச்ஐவி தொற்று உடை­யோ­ரின் அடை­யா­ளத்தை அச்­சட்­டம் பாது­காக்­கிறது.