கடும் குற்றங்கள் என்றது மருத்துவ மன்றம்

கடும் குற்றங்கள் என்றது மருத்துவ மன்றம்

2 mins read
01fcf812-6aeb-43cc-9b74-e876ddbe131e
-

போலி கொவிட்-19 தடுப்பூசி போட்டதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்

ஏறத்­தாழ 15 பேருக்கு போலி கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைப் போட்ட­தால் பணி­யி­டை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்ள டாக்­டர் ஜிக்­சன் குவா, 33, குறைந்­தது மூவ­ரி­டம் ஒரு தடுப்­பூ­சிக்கு $1,000 முதல் $1,500 வரை கட்­ட­ணம் விதித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. மேலும், குறைந்­தது 430 பேர் நேரில் வராமல் வேறிடத்திலிருந்து கொவிட்-19 பரி­சோ­தனை செய்ய அவர் அனு­மதித்­தார்.

இந்த நடை­முறை, அப்­போதைய விதி­க­ளுக்கு எதி­ராக இருந்­தது.

இந்த விவ­கா­ரம் குறித்து தீர்ப்­பளித்­துள்ள சிங்­கப்­பூர் மருத்­துவ மன்­றம், இத்­த­கைய குற்­றங்­கள் மிக­வும் கடு­மை­யா­னவை என்­றும் அதி­க­பட்ச தண்­ட­னை­யாக டாக்­டர் குவா 18 மாதங்­க­ளுக்­குப் பணி­ இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாகவும் கூறி­யது. மன்­றத்­தின் அறிக்கை நேற்று இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

அவ­ரது செயல்­பா­டு­கள் பொது­மக்­க­ளுக்கு இடர் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும் மருத்­து­வத் துறை மீதும் சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 பரி­சோ­தனை ஆற்­றல்­கள் மீதும் மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யைச் சீர்­கு­லைக்கும்படியானது என்­றும் மன்­றம் கூறி­யது. டாக்­டர் குவா விதி­களை எப்­படி மீறி­னார் என்­பது குறித்த மூன்று உதா­ர­ணங்­களை மன்­றத்­தின் இடைக்­கால உத்­த­ர­வுக் குழு பட்டி­ய­லிட்­டது.

வாரத்­தில் ஏழு நாள்­களும் தாம் நீண்ட நேரம் பணி­யாற்­றி­ய­தால் ஏற்­பட்ட சோர்வு கார­ண­மாக தமது செயல்­பா­டு­கள் கண்ணை மறைத்­து­விட்­ட­தாக தமது தற்­காப்பு வாதத்­தில் டாக்­டர் குவா கூறி­னார்.

மேற்­பார்­வை­யின்­கீழ் தாம் பணி­பு­ரிய அனு­ம­திக்­கு­மாறு கேட்­டுக்­கொண்ட அவர், கொவிட்-19 தொடர்­பி­லான மருத்­துவ நடை­முறை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கப்­போ­வ­தாக உறு­தி­ய­ளித்­தார்.

டாக்­டர் குவா எந்­த­வொரு நிபந்­த­னைக்­கும் உட்­பட்டு நடப்­பார் என்­ப­தில் தனக்கு நம்­பிக்கை இல்லை என்று உத்­த­ர­வுக் குழு கூறி­யது.