வங்கி அதிகாரிகள்போல நடித்து ஏமாற்றுவோர் குறித்து எச்சரிக்கை விடுக்கும் காவல்துறை

வங்கி அதி­கா­ரி­கள்போல­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் போல­வும் நடிக்­கும் நபர்­கள் தொலை­பேசி­யில் அழைத்து ஏமாற்­று­வே­லை­யில் ஈடு­படும் போக்­கைப் பற்றி காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

இதில் வங்கி அதி­கா­ரி­கள்­போல நடிக்­கும் நபர்­க­ளி­ட­மி­ருந்து பொது­மக்­கள் தொலை­பேசி அழைப்­பைப் பெறு­கின்­ற­னர்.

அழைப்­பைப் பெற்­ற­வ­ரின் வங்­கிக் கணக்கு தவ­றா­கப் பயன்­படுத்­தப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அவர் கள்ளப் பணத்தை நல்­ல பண­மாக மாற்­றி­ய­து குறித்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் ஏமாற்­றுப் பேர்­வழி கூறு­வார். இத்­த­கைய அழைப்­பு­களில் பெரும்­பா­லும், வெளி­நா­டு­களில் இருந்து அழைக்­கும்­போது தோன்­றும் +65 எனும் எண்­கள் வரும். குறி­வைக்­கப்­பட்­ட­வ­ரின் வங்­கிக் கணக்­கின் நுழைவு விவ­ரங்­கள், ஒரு­முறை பயன்­ப­டுத்­தும் கட­வுச்­சொல் போன்­ற­வற்றை அழைப்­ப­வர் வாங்­கிக்கொள்­கி­றார்.

பின்­னர் காவல்­து­றை­யின் வர்த்­தக விவ­கா­ரப் பிரிவு என்று கூறிக்­கொள்­ளும் மற்­றொரு ஏமாற்­றுப் பேர்­வ­ழிக்கு மாற்­றப்­ப­டு­கிறது.

வாட்ஸ்­அப்­பில் குறி­வைக்­கப்­பட்­ட­வ­ரு­டன் அவர் தொடர்­பு­கொண்டு, காவல்­து­றை­யி­டம் புகார் அளிக்­கத் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி புகைப்­ப­டம், அடை­யாள விவ­ரங்­கள் போன்­ற­வற்­றைப் பெறு­கிறார்.

காவல்­துறை தங்­களை விசா­ரிப்­ப­தா­கக் கூறும் போலிக் கடி­தங்­கள் ஏமாற்­றப்­பட்­ட­வர்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கின்­றன. தொலை­பேசி அழைப்பு, சமூக குறுஞ்­செய்தி தளங்­கள் போன்­ற­வற்­றில், அடை­யாள அட்டை எண், புகைப்­ப­டம் போன்ற விவ­ரங்­களை எந்த அர­சாங்க அமைப்­பும் கேட்­காது என்று போலி­சார் வலி­யு­றுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!