'நிர்வாக சேவைத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர்'

'நிர்வாக சேவைத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர்'

2 mins read
b6535a85-c15a-4037-a18e-6dbdd3796fb5
-

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லைச் சமா­ளிப்­ப­தில் அர­சாங்­கத்­தின் முடி­வு­கள் அனைத்­துமே சரி­யாக இருந்­தன என்று சொல்ல இய­லா­விட்­டா­லும், அவ்­வப்­போது வெளி­யான தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் முடி­வு­களை மறு­ஆய்வு செய்­ய­வும் மாற்­றி­ய­மைக்­க­வும் அர­சாங்­கம் எப்­போ­தும் தயா­ராக இருந்­த­தா­கப் பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார்.

கடந்த ஈராண்­டில் பல கடி­ன­மான முடி­வு­களை எடுக்­க­வேண்டி இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பொறுத்­தி­ருந்து பார்க்க அவ­கா­சமோ, எத்­த­கைய முடி­வெ­டுக்க வேண்­டும் என்ற வழி­காட்­டிக் குறிப்போ இல்­லா­மல் செயல்­பட வேண்­டி­யி­ருந்­த­தாக அவர் சொன்­னார்.

முழு­மை­யான தக­வல்­கள் கிடைக்­கா­மல் அந்­தந்த நேரத்­துக்கு எது ஆகச் சிறந்­ததோ அதன்­படி முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. முடிவு எடுக்­கா­மல் இருத்­தல், எல்­லாத் தக­வல்­களும் வேண்­டும் என்று காத்­தி­ருத்­தல் போன்­ற­வற்­றால் சூழல் மேலும் மோச­மா­கி­யி­ருக்­கும் என்­ப­தைத் திரு லீ சுட்­டி­னார்.

வரு­டாந்­தர நிர்­வா­கச் சேவை நிய­ம­னம், பதவி உயர்வு நிகழ்ச்­சி­யில் பிர­த­மர் உரை­யாற்­றி­னார். மூத்த பொதுச்­சேவை அதி­கா­ரி­கள் இதில் கலந்­து­கொண்­ட­னர்.

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இத்­த­கைய நிகழ்ச்சி நேர­டி­யாக இடம்­பெற்­றது.

கொவிட்-19 இந்­தத் தலை­மு­றைக்­கான நெருக்­கடி என்­ற­போ­தும் அதன் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் பொதுச் சேவை­யி­னர் சிறப்­பான முறை­யில் எதிர்­கொண்­ட­தா­க­வும் அர­சி­யல் தலை­வர்­க­ளு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்றி நிலை­மையை மிகச் சிறப்­பா­கக் கையாண்­ட­தா­க­வும் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 தொடங்­கி­ய­போது மக்­க­ளின் உயி­ரைக் காக்­கும் பொருட்டு முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன. எல்­லை­களை மூடி­ய­து­டன் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மேலும் அன்­றாட பாதிப்பு மிகக் குறை­வாக இருந்­த­போது நிலைமை மோச­மா­னால் செய்­ய­வேண்­டி­யவை குறித்து திட்­ட­மி­டப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­களில் கிரு­மிப் பர­வ­லைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­கள், தேசிய அள­வி­லான தடுப்­பூ­சித் திட்­டம் எனப் பல்­வேறு முயற்­சி­களில் நிர்­வா­கச் சேவைப் பிரி­வின் தலை­வர்­கள் பொறுப்­பேற்­றுக்­கொண்டு செயல்­பட்­ட­னர் என்­றார் பிர­த­மர் லீ.

"தற்­போது எது வந்­தா­லும், சமா­ளிப்­ப­தற்கு உரிய நம்­பிக்கை நம்­மி­டம் உள்­ளது," என்று பிர­தமர் லீ குறிப்­பிட்­டார்.