சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் 'யுடவுன்' தங்குமிடத்தில் மின்னிலக்க நாணய மோசடிக்கான கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் இடம்பெற்ற வழக்கமான சோதனையில் அது கண்டுபிடிக்கப்பட்டதாக தேசியப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் தெரிவித்தது.
இத்தகைய கருவிகளில் இருந்து அளவுக்கு அதிகமான வெப்பம் வெளியேறுவதால் தீ மூளும் அபாயம் இருப்பதை அது சுட்டியது.
மிக அதிகமான மின்சாரம் இந்தக் கருவிகளுக்குத் தேவைப்படுவதால் அடிக்கடி மின்-தடையும் ஏற்படக்கூடும்.
பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்கீழ் இத்தகைய அபாயகரமான கருவிகளை அறைகளில் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதை அலுவலகம் சுட்டியது.
விதிகளை மீறியோர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் குறிப்பிட்டது.
தங்கியிருப்போரின் பாதுகாப்பை முன்னிட்டு கருவி அகற்றப்பட்டுவிட்டது.
இது குறித்த விசாரணை தொடர்கிறது.

