புதிய பசுமைக் கட்டமைப்பு

புதிய பசுமைக் கட்டமைப்பு

2 mins read
eaa15d43-ce3a-45a9-ad7a-860924b33443
மேலிருந்து படமெடுக்கப்பட்ட லேப்ரடார் பூங்கா உள்ள பகுதி. 2025ஆம் ஆண்டுக்குள் இந்த வட்டாரத்தில் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லேப்­ர­டார், அலெக்­சாண்­டிரா பகுதி­களில் 2025ஆம் ஆண்­டுக்­குள் நான்கு புதிய பூங்­காக்­கள் அமைக்கப்பட­வுள்­ளன.

லேப்­ர­டார் இயற்­கைப் பாது­காப்­புப் பகு­திக்­கும் அதைச் சுற்­றி­யி­ருக்­கும் பசுமை வாய்ந்த இடங்­களுக்­கும் உள்ள தொடர்பை மேம்­படுத்­த திட்­டம் வரை­யப்­பட்­டுள்­ளது. அதன்கீழ் புதிய பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்ளன.

'லேப்­ர­டார் நேச்­சர் பார்க் நெட்­வொர்க்' எனும் லேப்­ர­டோர் இயற்­கைப் பூங்கா கட்­ட­மைப்­பின்­கீழ் புதிய பூங்­காக்­கள் அமைக்­கப்­படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார்.

இந்­தப் புதிய கட்­ட­மைப்பு 200 ஹெக்­ட­ருக்­கும் அதி­க­மான பரப்­பளவைக் கொண்ட நிலத்­தில் அமை­யும். இதில் புதி­தாக அமைக்­கப்­படும் நான்கு பூங்­காக்­கள், ஏற்­கெனவே இருக்­கும் ஆறு பூங்­காக்­கள், லேப்­ர­டார் இய­ற்கைப் பாது­காப்­புப் பகுதி உள்­ளிட்­டவை இடம்­பெ­றும்.

இதன்படி லேப்ரடார் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியையும் வெஸ்ட் கோஸ்ட் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியையும் இணைக்க பாசிர் பாஞ்சாங் பூங்கா விரிவுபடுத்தப்படும். அதற்கான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும்.

வெஸ்ட் கோஸ்ட் இயற்­கைப் பாது­காப்­புப் பகுதி, புதிய லேப்­ரடார் இயற்­கைப் பாது­காப்­புக் கட்­ட­மைப்­பில் இடம்­பெ­றா­து.

நான்கு புதிய பூங்­காக்­களில் முதல் பூங்கா 2024ஆம் ஆண்­டுக்­குள் அமைக்­கப்­படும். 0.4 ஹெக்­டர் பரப்­ப­ள­வைக் கொண்ட அது 'கிங்ஸ் டாக்' பகு­தி­யில் இருக்கும்.

அதற்குப் பிறகு 2025ஆம் ஆண்டுக்குள் அலெக்சாண்டிரா இயற்கைப் பூங்கா அமைக்கப்படும். வனப் பகுதியில் அமைந்துள்ள 500 மீட்டர் பாதை அந்தப் பூங்காவின் ஓர் அங்கம்.

இந்த வட்டாரத்தில் 'கெப்பல் கிளப்' நிலையம் அமைந்துள்ள பகுதியில் வீடமைப்புத் திட்டங்கள் கட்டப்படவுள்ளன. அங்கு சுமார் 6,000 வீவக வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.

அந்த வீட­மைப்­புத் திட்­டங்­களு­டன் சேர்த்து இதர இரண்டு பூங்காக்­களும் அமைக்­கப்­படும்.

லேப்ரடார், அலெக்சாண்டிரா பகுதிகளில் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன