மின்கலன்களில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்வாகனங்களுக்கு மின்னூட்டும் நிறுத்துமிடங்களை நடத்தும் நிறுவனங்கள், மின்வாகனங்களின் உரிமையாளர் நிறுவனங்கள் ஆகியவை பணம் சம்பாதிக்க உதவ புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
புதைவள எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க ஊக்குவிக்கும் முயற்சிகளில் 'இலெக்ட்ரிக் விஹிக்கல் எக்செலரேட்டர் புரோகிராம்' எனும் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இத்திட்டம் அடங்கும்.
மின்வாகனங்களுக்கு மின்னூட்டுவதன் மூலம் நச்சுவாயு வெளியாவது குறையும். எந்த அளவு நச்சுவாயு குறைகிறது என்பதைக் கணக்கிட்டு 'சிஆர்எக்ஸ் கார்பன்பேங்க்' எனும் சிங்கப்பூரின் கரிம வர்த்தக நிறுவனம் கரிமக் கட்டணப் புள்ளிகளை வழங்கும்.

