வாடகைக்கு விடப்படும் கொண்டோமினியம், வீவக வீடுகள் அதிகரிப்பு, வாடகை ஏற்றம்

வாடகைக்கு விடப்படும் கொண்டோமினியம், வீவக வீடுகள் அதிகரிப்பு, வாடகை ஏற்றம்

2 mins read
b5a89453-4661-4f4b-8d74-2f8eb76a4b62
-

வாட­கைக்கு விடப்­படும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக, கொண்­டோ­மி­னி யம் வீடு­க­ளின் எண்­ணிக்கை பல மாதச் சரி­வுக்­குப் பிறகு கடந்த மாதம் அதி­க­ரித்­தது. அத்­து­டன் அவற்­றுக்­கான வாட­கை­யும் தொடர்ந்து ஏற்­றம் கண்டு வரு­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்ள நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் வீடு­களை வாட­கைக்கு எடுக்க விரும்­பு­வோர் தங்­க­ளுக்கு ஏற்­பு­டைய வீடு­க­ளைத் தேட ஒவ்­வொரு வீடா­கச் சென்று பார்க்க முடி­வ­தால் வாட­கைக்கு விடப்­படும் வீடு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் வரு­கை­யா­லும் கூடு­தல் வீடு­கள் வாட­கைக்கு விடப்­ப­டு­கின்­றன.

கடந்த மாதம் வாட­கைக்கு விடப்­பட்ட கொண்­டோ­மி­னி­யம் வீடு­

க­ளின் விகி­தம் 21.2 விழுக்­காடு உயர்ந்­தது. ஏறத்­தாழ 4,683 கொண்­டோ­மி­னி­யம் வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன. ஒப்­பு­நோக்க, பிப்­ர­வரி மாதத்­தில் 3,863 கொண்­டோ­மி­னி­யம் வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்­டன. இத்­த­க­வல்­களை சொத்து இணை­ய­வா­சல்­க­ளான 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் ஆகி­யவை நேற்று வெளி­யிட்­டன.

கடந்த மாதம் கூடு­தல் வீவக வீடு­களும் வாட­கைக்கு விடப்­பட்­டன. வாடகைக்கு விடப்­படும் வீவக வீடு­க­ளின் விகி­தம் 31.3 விழுக்­காடு ஏற்­றம் கண்­டது. கிட்­டத்­தட்ட 1,767 வீவக வீடு­கள் கடந்த மாதம் வாட­கைக்கு விடப்­பட்­டன. பிப்­ர­வரி மாதம் வாட­கைக்கு விடப்­பட்ட 1,346 வீடு­க­ளை­விட இது அதி­கம்.

கொண்­டோ­மி­னியம் வீடு­க­ளுக்­கான வாடகை சென்ற மாதம் 2.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. வீவக வீடு­க­ளுக்­கான வாடகை 1.4 விழுக்­காடு உயர்ந்­தது. கொண்­டோ­மி­னி­யம் வீடு­க­ளுக்­கான வாடகை தொடர்ந்து 15 மாதங்­க­ளாக ஏற்­றம் கண்டு வரு­கிறது. வீவக வீடு­

க­ளுக்­கான வாடகை தொடர்ந்து 21 மாதங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

"எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பிறகு, அண்மை வாரங்­க­ளாக மலே­சிய ஊழி­யர்­கள் பலர் தங்­கு­வ­தற்­காக வாடகை வீடு­கள் பற்றி விசா­ரிக்க எங்­களை அழைத்­துள்­ள­னர்," என்று

ஆரஞ்­ச்டீ அண்ட் டை சொத்து முக­வை­யின் ஆய்வு மற்­றும் பகுப்­பாய்­வுப் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர் திரு­வாட்டி கிறிஸ்­டின் சுன் கூறி­னார்.

ஹாங்­காங்­கில் மிகக் கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அவற்­றி­ட­மி­ருந்து தப்­பிக்க ஹாங்­காங் நாட்­ட­வர்­கள் பலர் சிங்­கப்­பூ­ரில் குறைந்த காலத்­துக்கு வாடகை வீடு­களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஹட்­டன்ஸ் ஏஷி­யா­வின் தலைமை நிர்­வாகி மார்க் யிப் தெரி­வித்­தார்.