'சினோவேக்கைவிட கூடுதல் பாதுகாப்பு தரும் ஃபைசர்'

'சினோவேக்கைவிட கூடுதல் பாதுகாப்பு தரும் ஃபைசர்'

1 mins read
51782ea0-48f3-4fc9-9edb-76e6e55ee57a
-

ஃபைசர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளை­விட சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் மிகக் கடு­மை­யான அறி­கு­றி­கள் ஏற்­படும் அபா­யம் ஐந்து மடங்கு அதி­கம் என்று உள்­ளூர் தொற்­று­நோய் நிபு­ணர்­கள் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

ஃபைசர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரை­விட சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் இரண்டு மடங்­குக்­கும் அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மொடர்னா தடுப்­பூசி போட்டுக்­ கொண்­ட­வர்­களு­டன் ஒப்­பி­டும்­போது சினோ­வேக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் ஏறத்­தாழ ஆறு மடங்கு அதி­கம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.