சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 4,552 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம்.
வாரயிறுதியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமைகளில் பதிவு செய்யப்படுவதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்ற நாள்களைவிட செவ்வாய்க்கிழமைகளில் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக 324 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் நால்வர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 19 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 36 பேருக்கு உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

