சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து
சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் நிதி தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளன.
அதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியாவின் நிதி அமைச்சும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் கையெழுத்திட்டு உறுதி செய்துள்ளன.
இரு நாடுகளும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் இரு நாடு களுக்கும் இடையே மின்னிலக்கப் பொருளியலை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் விரிவான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் லீ சியன் லூங்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனும் சிங்கப்பூரில் சந்தித்தபோது நிதி தொழில்நுட்பத் துறையில் பாலம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான புதிய ஒப்பந்தம், நிதி தொழில்நுட்பத் தில் இரு தரப்பு, பல தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு அதிகாரிகளுக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது.
இந்தக் கட்டமைப்பு, இரு நாட்டைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று மற்றதன் சந்தைகளில் நுழைவதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தரும்.
அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர், ஆஸ்திேரலிய கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில் துறையினர் ஆகியோருக்கு இடையிலான தற்போதைய தொடர்பை புதிய கட்டமைப்பு மேலும் வலுப்படுத்துகிறது.
நிதி தொழில்நுட்பத் துறையில் உருவாகும் பிரச்சினைகளில் கூட்டு புத்தாக்க தீர்வுகளைக் காணவும் கட்டமைப்பு உதவும். இரு சந்தைகளில் உள்ள போக்கு, அனு பவங்கள் குறித்து இரு நாடுகளும் தகவல்களைப் பரிமாறிக்கொள் ளும்.

