இவ்வார இறுதியில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் இது நாள் வரை கட்டிப் போடப்பட்டிருந்த சிங்கப்பூரர்கள் ஜோகூர் பாருவுக்குப் படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்ப ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல் அறைகள் நிரம்பி வருகின்றன. சிங்கப்பூரர்களிடம் இருந்து ஹோட்டல் அறைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணங்களும் கூடி வருகின்றன. கடந்த வாரயிறுதி நாட்களைவிட (ஏப்ரல் 9-10) இவ்வார இறுதியில் ஹோட்டல் அறைகளுக்கான முன்பதிவு இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக பயண முன்பதிவு தளங்கள் தெரிவிக்கின்றன.
'எக்ஸ்பீடியா' குழுமத்தின் ஆசியாவுக்கான பொதுத் தொடர்புப் பிரிவின் தலைவரான லாவினியா ராஜாராம், வார இறுதி சுற்றுலாத் தளங்களில் ஜோகூர் பாரு பிரபலமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். பல சிங்கப்பூரர்கள் நீண்ட வார இறுதியைப் பயன்படுத்தி விடு முறையில் செல்ல விரும்புவதாக அவர் கூறினார்.
'டிரிப்அட்வைசர்' முன்பதிவு தளத்தில் முந்தைய வாரயிறுதி யைவிட இவ்வார இறுதிக்கான ஹோட்டல் அறைகளின் கட்டணங்கள் 18 விழுக்காடு கூடியுள்ளது.
அதன் உலகளாவியச் சந்தைப் பிரிவின் உதவி தலைவரான ஜேன் லிம், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர்-மலேசிய எல்லைகள் திறக்கப்பட்டதால் உள்ளூர்காரர்கள் விடுமுறையில் செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.
சிங்கப்பூரர்களுக்கு சுற்றுலா என்பது விமானத்தில் செல்வது அல்ல, எல்லையைத் தாண்டி காரில் செல்வது என்று அவர் சொன்னார்.
ஜோகூர் பாருவில் 146 அறை களைக் கொண்ட சிட்ரஸ் ஹோட்டலில் இவ்வார இறுதியில் அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டன. இவற்றில் 75 விழுக்காடு சிங்கப்பூரர்களால் முன்பதிவு செய்யப்பட்டவை.
கடந்த வாரயிறுதியில் இதே ஹோட்டலில் 50 விழுக்காடு நிரம்பி யிருந்தது. இவற்றில் பாதி சிங்கப்பூரர்களால் நிரம்பியது.
வர்த்தக மேம்பாட்டு, செயல்முறைப் பிரிவின் மூத்த உதவி தலைவரான தேஜிந்தர் சித்து, ஏப்ரல் 1க்குப் பிறகு ஹோட்டல் அறைகளுக்கான தேவை அதி கரித்து வருவதாகக் கூறினார்.
சுமார் 345 அறைகள் உள்ள ரினைசன்ஸ் ஜோகூர் பாரு ஹோட்டலில் கட்டணங்கள் 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன. இதன் பொது நிர்வாகியான கனிட் சங்மூக்டா, இவ்வார இறுதி யில் 70 முதல் 75 விழுக்காடு வரை அறைகள் நிரம்பலாம் என தமது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.
"கடைசி ேநர முன்பதிவு திடீரென அதிகரிக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

