கண்ணாடி சன்னல்களை உடைத்தவருக்கு 3 வாரச் சிறை

1 mins read
7d04271d-2a0f-420f-8152-0e1998bab977
-

கவண்­வில் பயிற்­சி­யின்­போது குறி­த­வறி அடுக்­கு­மாடி வீடு­க­ளின் கண்­ணாடி சன்­னல்­களை உடைத்த 61 வயது முதி­ய­வ­ருக்கு நேற்று, மூன்று வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2019 டிசம்­பர் மாதத்­தில் ஹவ்­காங் அவென்யூ 9ல் உள்ள புளோக் 933ன் அடுக்­கு­மாடி கார் நிறுத்­து­மி­டத்­தில் கவண்­வில் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­போது அரு­கில் இருந்த வீடு­க­ளின் கண்­ணாடி சன்­னல்­களை உடைத்­ததை சான் ஃபான் கியோ இம்­மா­தம் ஐந்­தாம் தேதி ஒப்­புக்­கொண்­டார்.

பொழு­து­போக்­கிற்­காக உலோ­கக் குண்­டு­களை கவண்­வில்­மூ­லம் குறி­பார்த்து பிளாஸ்­டிக் போத்­தல்­கள்­மீது அடிக்­கும் பயிற்­சி­யில் அவர் ஈடு­பட்­டார்.

2019 நவம்­பர் மாதத்­துக்­கும் 2020ஆம் ஆண்டு ஜன­வ­ரிக்­கும் இடையே, தாவ்­பாவ் மின்-வர்த்­த­கத் தளத்­தின் மூலம் ஏழு கவண்­வில்­க­ளை­யும், அவற்­றில் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உலோ­கக் குண்­டு­க­ளை­யும் வாங்­கி­ய­தா­கக் கூறி­னார் சான்.

தனிப்­பட்ட வேலை­களை முடிப்­ப­தற்கு அவ­கா­சம் தரும் பொருட்டு, இந்த மாதம் 27ஆம் தேதி­யில் இருந்து தண்­ட­னையை நிறை­வேற்ற சானுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.