வேலையை விட்டு 20 ஆண்டுக்கும் மேல் ஆன நிலையில், முன்னாள் முதலாளி தனக்கு $500 தரத் தவறியதாக எண்ணி வெறுப்புற்ற ஆடவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு $2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
62 வயது சீட் கியான் எங், தனது முன்னாள் முதலாளி திரு நியோவை தொலைபேசியில் அழைத்து 'உன் மொத்த குடும்பமும் உயிரிழக்க நேரிடும்' என்று மிரட்டியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

