தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்ட பிரதமர் லீ

தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்ட பிரதமர் லீ

1 mins read
9e50f292-2f3b-4838-98a2-48aa0a58c3f0
பிரதமர் லீயின் ஃபேஸ்புக் பதிவு. -

புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்தினார் பிரதமர் லீ சியன் லூங்.

"இன்று தமிழர்கள், சித்திரைப் புத்தாண்டையும், சீக்கியர்கள் வைசாகியையும் மலையாள, தெலுங்கு, வங்காளி சமூகத்தினர் முறையே வி‌ஷு, உகாதி, பொஹெலா பை‌‌‌ஷாக் பண்டிகைகளைல் கொண்டாடுகின்றனர்.

"வெவ்வேறு சமூக, சமயத்தினர் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடும் பண்டிகைகளில் இந்திய புத்தாண்டும் ஒன்று. நமது வேறுபட்ட கலாசார, இனப் பிரிவுகள் சிங்கப்பூரின் வளமான பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகின்றன.

"தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் இப்போது நமது பண்டிகைகளைக் கொண்டாட முடிந்தாலும் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விழிப்புடன் இருங்கள்," என்று பிரதமர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தியர்களுக்குச் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிவிட்டிருந்தார்.

"தத்தம் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களும் அவர்களது குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற வேண்டும்," என்றும் வாழ்த்தினார் திரு லீ.