தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைக்காக மன்னிப்புக் கோரிய வெளிநாட்டு ஊழியர் நிலையம்

தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைக்காக மன்னிப்புக் கோரிய வெளிநாட்டு ஊழியர் நிலையம்

1 mins read
770f671b-fc91-4efa-a3aa-5accc5cb93cc
படம்: எம்டி ‌‌ஷரிஃப் ஃபேஸ்புக் -

அறிவிப்புப் பலகையில் உள்ள தமிழ், பெங்காலி மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளது வெளிநாட்டு ஊழியர் நிலையம்.

சூன் லீ ரோட்டில் உள்ள பொழுதுபோக்கு நிலையத்தின் உணவுக்கடைத் தொகுதிக்கு முன் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையின் மொழிபெயர்ப்பில் பிழைகள் இருப்பதைக் கண்டு பங்களாதே‌ஷ் ஊழியர் ஒருவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

அந்தப் பலகையின் தமிழ் மொழிபெயர்ப்பிலும் பிழைகள் இருந்தன. இதற்காக வெளிநாட்டு ஊழியர் நிலையம் மன்னிப்பு கோரி அந்தப் பலகைகளை மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தது.