அனைத்து இந்தியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து: பிரதமர்

அனைத்து இந்தியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து: பிரதமர்

1 mins read
d5a33f3a-2bce-432d-a12b-10394a62b2df
-

பிர­த­மர் லீ சியன் லூங், புத்­தாண்­டைக் கொண்­டா­டும் அனைத்து இந்­தி­யர்­க­ளுக்­கும் தமது வாழ்த்து­ க­ளைத் தெரி­வித்­துக் கொண்­டார்.

"தமி­ழர்­கள் இன்று (14-4 -2022) புத்­தாண்­டைக் கொண்­டா­டு­கின்­ற­னர். சீக்­கி­யர்­களும் வைசாகி தினத்­தைக் கொண்­டாடு கின்­ற­னர். இதே கால­கட்­டத்­தில் மலை­யா­ளம், தெலுங்கு, மேற்கு வங்க சமூ­கத்­தி­னர் முறையே விஷு, உகாதி, பொஹெலா பைஷாக் பண்­டி­கை­யைக் கொண்­டா­டு­கின்­ற­னர்.

"ஏப்­ரல் மாதம் முழு­வ­தும் வெவ்­வேறு சமூக, சம­யத்­தி­னர் இந்­திய புத்­தாண்­டைக் கொண்­டா­டு­கின்­ற­னர். நமது வேறு­பட்ட கலா­சார, இனப் பிரி­வு­கள் சிங்­கப்­பூ­ரின் வள­மான பன்­மு­கத்­தன்­மையை இது காட்­டு­கிறது.

"தளர்த்­தப்­பட்ட பாது­காப்பு நடை­மு­றை­க­ளு­டன் இப்­போது நமது பண்­டி­கை­க­ளைக் கொண்­டாட முடிந்­தா­லும் கொவிட்-19 நோய்த்­தொற்­றைக் கட்­டுக்­குள் வைத்­துக்­கொள்ள விழிப்­பு­டன் இருங்­கள்," என்று பிர­த­மர் தமது ஃபேஸ்புக் பதி­வில் புத்­தாண்­டைக் கொண்­டா­டும் இந்­தி­யர்­க­ளைக் கேட்­டுக்கொண்­டார்.

"தத்­தம் புத்­தாண்­டைக் கொண்­டா­டும் அனைத்து இந்­தி­யர்­களும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ரும் நல்ல ஆரோக்­கி­ய­மும் மகிழ்ச்­சி­யும் பெற வேண்­டும்," என்­றும் பிர­த­மர் லீ வாழ்த்­தி­னார்.

தமது ஃபேஸ்புக் பதி­வு­டன் ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் கோயில் மற்­றும் ஸ்ரீ குரு சிங் சாபா சீக்­கிய கோயி­லின் படத்­தை­யும் அவர் வெளி­யிட்­டி­ருந்­தார்.