மாலதி தாஸ் காலமானார்

மாலதி தாஸ் காலமானார்

1 mins read
80671ab9-d46d-4d45-bf35-8a55fd731d9f
மாலதி தாஸ்.கோப்புப் படம்: மாலதி தாஸ் குடும்பம் -

மூத்த வழக்­க­றி­ஞ­ரும் சமூக ஆர்­வ­ல­ரு­மான மாலதி தாஸ் தமது 53வது வயதில் கால மானார்.

இளம் வய­தி­லேயே மாலதி தைரி­யத்­து­டன் செல்­ப­டக்கூடி­ய­வர். ஆறு வய­தாக இருக்­கும்­போது சைக்­கி­ளி­லி­ருந்து தமது சகோ­தரி­யைத் தள்­ளி­விட்ட சிறு­வனை அவ­ரும் தள்­ளி­விட்­டார்.

இது குறித்து அவரது தந்தை கேட்டபோது சிறுவனை மட்டும் அப்படிச் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும் என்று பதில் கேள்வி எழுப்பினார். இந்த மறக்க முடியாத சம்பவத்தை நேற்று இறுதிச் சடங்கின்போது அவரது சகோதரி ஷிலா நினைவுகூர்ந்தார். மாலதி தாஸ் செவ்வாய்க்கிழமை பக்கவாதத்தால் காலமானார்.