இரண்டு வெள்ளி பொருட்களுக்கு பிரபலமான ஜப்பானிய டெய்சோ கடையில் விலை கூடுகிறது.
மலிவு விலை கடையான டெய் ேசாவில் வீட்டுக்குத் தேவையான உபயோகப் பொருட்கள் உட்பட பல பொருட்கள் இரண்டு வெள்ளிக்கு விற்கப்படுகின்றன. ஆனால் மே 1ஆம் தேதியிலிருந்து பொருள் சேவை வரி(ஜிஎஸ்டி) உள்ளடங்கி இருக்காது என்று டெய்சோ அறி விப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு பொருளுக் கும் ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
இது குறித்து அதன் எல்லா கிளைகளின் நுழைவாயில்களிலும் அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
இயோன் ஆர்ச்சர்ட், தெம்பனிஸ் 1ல் உள்ள கடைகளிலும் நேற்று விலை மாற்றம் குறித்த அறிவிப்பு கள் காணப்பட்டன.
தெம்பனிஸ் 1ல் உள்ள கடையில் வைக்கப்பட்ட அறிவிப்பில் மே 1ஆம் தேதியிலிருந்து எல்லா விலை களிலும் பொருள் சேவை வரி சேர்க்கப்பட்டிருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து ஜிஎஸ்டி பதிவு பெற்ற நிறுவனமாக டெய்சோ செயல்பட்டு வருவதை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் டெய்சோ வாடிக்கையாளர்கள் விலை உயர்வு குறித்து கவலைப்படவில்லை.
ஒவ்வொரு வாரயிறுதியிலும் டெய்சோவில் பொருட்களை வாங்கும் ஆசிரியையான வூ ஸின், 42, டெய்சோவில் விலை ஏற்றப் படுவது குறித்து அறிந்திருக்க வில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
"வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் மலிவாகக் கிடைக்க ேவண்டும். சிறிது கூடுவதால் எங்களைப் போன்ற டெய்சோ வாடிக்கையாளர்களை தடுத்துவிட முடியாது," என்று அவர் கூறினார்.
மற்றொரு ஆசிரியரான டெர்ரி மோரன், 55, விலை அதிகரிப்பு தம்மை ஆச்சரியப்படுத்தவில்லை என்றார்.
"மாதத்தில் ஒரு முறையாவது டெய்சோவில் நான் பொருட்களை வாங்குகிறேன்.
எண்ணெய், பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் டெய்சோவில் விலை உயர்த்தப்படுவது ஆச்சரியமில்லை. டெய்சோவில் தொடர்ந்து பொருட்களை வாங்குவேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

