மே முதல் ஜூலை வரை வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) எண்ணிக்கை அதிகரிக்கிறது. மூன்று மாதங்களுக்கு அது சுமார் 14.3 விழுக்காடு அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஐந்து பிரிவுகளிலும் 11,951 சிஓஇக்கள் இருக்கும் என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது. இது, பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான தற்போதைய சிஓஇ எண்ணிக்கையைவிட 1,499 கூடுதலாகும்.
1,600 சிசி மற்றும் 130பிஎச்பி கார்களுக்கு சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1,224 சிஓஇ கிடைக்கும். இது, தற்போதைய காலகட்டத்தில் உள்ள 1,062 வாகன உரிமைச் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டால் 15.3 விழுக்காடு அதிகமாகும். பெரிய, சக்திவாய்ந்த கார்களுக்கான பிரிவில் 1,053 சிஓஇ இருக்கும். இது, நடப்பில் உள்ள 1,099 சிஓஇயைவிட குறைவு. சரக்கு வாகனங்கள், பேருந்து களுக்கு மாதம் 205 சிஓஇ கிடைக்கும்.
இது, தற்போதைய 152 சிஓஇக் களைவிட 34.9 விழுக்காடு கூடுதலாகும். மோட்டார் சைக்கிள் பிரிவில் 38.6 விழுக்காடு கூடி தற்போதைய 809விட 1,121 சிஓஇ இருக்கும்.
மோட்டார் சைக்கிள்களைத் தவிர மற்ற எந்த வகையான வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொதுப் பிரிவில் நடப்பில் உள்ளதைவிட 5.3 விழுக்காடு கூடி 379ஆக சிஓஇ கிடைக்கும்.

