என்டியுவுடன் தொடர்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள்

என்டியுவுடன் தொடர்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள்

2 mins read
a8b89d28-50d7-4da8-a545-e8d4bf770d67
-

நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக் கழ­கத்­தின் கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளின் ஒத்­து­ழைப்பை நாடும் நிறு­வ­னங்­க­ளுக்கு கைகொ­டுப்­ப­தற்­காக புதிய திட்­டங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

வர்த்­தக ஆய்வு சோத­னைக் கூடம், கூட்டு ஆய்வு நிலை­யங்­கள் போன்­றவை திட்­டங்­களில் சில.

குளோ­பல் அலை­யன்ஸ் ஆஃ|ப் இண்­டஸ்­டி­ரிஸ்@என்­டியு (கெய்ன்) எனும் புதிய முயற்சி தொழில்­துறை­யி­ன­ரு­டன் தொடர்பை வலுப்­ப­டுத்­தும் பல்­க­லைக்கழ­கத்­தின் பல ­தரப் ­பட்ட திட்­டங்­களை ஒருங்­கி­ணைக்­கும்.

அனைத்­து­லக நிறு­வ­னங்­க­ளுக்கு தேவைப்­படும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, பொறி­யி­யல், தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட துறை­களில் உள்ள பல்­க­லைக்கழக நிபு­ணர்­களை அடை­யா­ளம் காண­வும் புதிய முயற்சி உத­வும்.

தொழில்­துறை, அர­சாங்­கம், கல்வி நிலை­யம் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான தொடர்பு, புத்­தாக்­கத்­தின் மூலம் பொரு­ளி­ய­லைத் தூண்­டும் அர­சாங்­கத்­தின் இலக்கை பூர்த்தி செய்ய மிக­வும் அவ­சி­யம் என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்க வர்த்­தக, தொழில் சபை, ஐரோப்­பிய வர்த்­தக, தொழில் சபை ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து என்­டி­யு­வின் 'கெய்ன்' ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் கலந்­து­கொண்டு பேசி­னார்.

என்­டி­யு­வு­டன் இணைந்து செயல்­படும் வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றி­யும் நோக்­கத்­தோடு பிரெஞ்சு அழகு சாதன நிறு­வ­ன­மான லோரி­யல், அமெ­ரிக்க தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான ஐபி­எம் உட்­பட பல நிறு­வ­னங்­கள் இதில் பங்­கேற்­றன.

கலா­சார, சமூக, இளை­யர் துறை துணை சரு­மான லோ, புத்­தாக்­கம் மற்­றும் புதிய சந்­தை­களில் நிறு­வ­னங்­கள் நுழைய இத்­த­கைய ஒத்­து­ழைப்பு மிக முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார்.

"உள்ளூர் நிறுவனங்கள், ஆய்வாளர்கள், தொழில்துறை பங்காளிகள் தங்களது வர்த்தக ஆற்றலை மேம்படுத்த 'கெய்ன்' எனும் தளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நன்யாங் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்தின் தலைவரான சுப்ரா சுரேஷ், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரை ஆற்றினார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு இங்குள்ள பொது, தனியார் துறைகளில் ஆழ மான தொடர்பு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க தொழில் நுட்ப நிறு வனமான எச்பி, ஜெர்மன் மோட்டார் வாகன நிறுவனமான காண்டி னெண்டல் ஆகிய இரண்டு நிறு வனங்கள் என்டியு வளாகத்தில் வர்த்தக ஆய்வகங்களை அமைத்து உள்ளதை சுப்ரா சுரேஷ் எடுத்து உரைத்தார்.