இயக்குநருக்கு $4,250 அபராதம்

இயக்குநருக்கு $4,250 அபராதம்

1 mins read
c5d56de3-057a-46b9-bf0d-770afa7fd339
-

மலே­சி­யா­வில் இருந்து விற்­ப­னைக்­காக 2020ஆம் ஆண்­டில் 400 கிலோ­வுக்­கும் அதிக எடை­யுள்ள காய்­க­றி­களைச் சட்­ட­வி­ரோ­த­மாக இறக்­கு­மதி செய்த லீ இயூ லிம் என்­ப­வ­ருக்கு நேற்று $4,250 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

'டிஎஸ்­ஒய்டி' என்ற நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான லீக்கு, அந்­தக் குற்றச்செயல் நடக்­கா­மல் தடுக்க தவ­றி­ய­தற்­காக அதே அளவு அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. சிங்­கப்பூர் உணவு முக­வை­யும் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­ய­மும் நேற்று இதனைத் தெரி­வித்­தன.

உட்­லண்ட்ஸ் தள­பத்­தி­யத்­தில் பணி­யில் இருந்த சோத­னைச்­சாவடி ஆணைய அதி­கா­ரி­கள், 2020 நவம்­பர் 17ஆம் தேதி டிஎஸ்­ஒய்டி நிறு­வனத்­திற்கு வந்த வாக­னம் ஒன்றை சோத­னை­யிட்­ட­னர்.

பிறகு நடந்த புலன்­வி­சா­ரணை மூலம் சட்­ட­விரோத காய்­கறி கடத்­தல் பற்றி தெரி­ய­வந்­தது.