பூகிஸ் பகுதியில் உள்ள லியாங் சியா ஸ்திரீட்டில் நேற்று இறைச்சி வெட்டும் கத்தியால் ஒரு மாது தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எண் 75 பீச் ரோட்டில் உதவிக்கு வரும்படி நேற்று பிற்பகல் சுமார் 5.30 மணிக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்தைக் காட்டும் இரண்டு நிமிட காணொளியைத் தான் பார்த்ததாகவும் வெட்டுகத்தியால் ஒரு மாதை, ஆடவர் ஒருவர் தாக்கியது தெரிந்ததாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அந்த ஆடவரைத் தடுக்க பொதுமக்கள் பலரும் முயன்றதாகவும் தெரிந்தது. கடைசியில் அந்த ஆடவர் பீச் ரோட்டை நோக்கி ஓடி பிறகு லியாங் சியா ஸ்திரீட்டின் பின் சந்தில் நுழைந்து ஓடிவிட்டதாக தெரிந்தது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

