நீச்சல் குளத்தில் மரணம்; துரதிருஷ்ட சம்பவம் என தீர்ப்பு

முதி­ய­வர் ஒரு­வர் ஏற்­றுக்­கொள்ள இய­லாத வகை­யில் நடந்து கொண்டு இருக்­கி­றார் என்று அவ­ரு­டைய பணிப்­பெண் குறை­கூறி இருந்­தார். அத­னால் மனம் சஞ்­ச­லப்­பட்ட அந்த முதி­ய­வர் பின்­னி­ரவு நேரத்­தில் கொஞ்­சம் தூரம் நடந்து வர­லாம் என்று வெளியே சென்­றார்.

பிறகு அவர், புக்கிட் தீமா பகுதியில் இருக்கும் கூட்­டு­ரிமை அடுக்­கு­மாடி புளோக் ஒன்­றின் நீச்­சல் குளத்­தில் மிதந்த நிலை­யில் காணப்­பட்­டார். பென்­சன் டே, 73, என்ற வேலை ஓய்­வு­பெற்ற அந்த முதி­ய­வ­ரின் உடல் நீச்­சல் குளத்­தில் இருந்து மீட்­கப்­பட்­டது. அவர் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் அறி­வித்­த­னர்.

இச்சம்­ப­வம் சென்ற ஆண்டு செப்­டம்­பர் 2ஆம் தேதி அதி­காலை 3.12 மணிக்கு நிகழ்ந்­தது. முதி­ய­வர் மர­ணம் தொடர்­பான விசா­ரணை நேற்று நடந்­தது. துர­திருஷ்­ட­வ­ச­மான சம்­ப­வம் என மரண விசா­ரணை அதி­காரி கிறிஸ்­டோ­ஃபர் கோ தீர்ப்­ப­ளித்­தார்.

நீச்­சல் குளப் பகுதி இருட்­டாக இருந்­தது. மழை பெய்து கொண்டு இருந்­தது. தரை வழுக்­கும் நிலை­யில் இருந்­தது. அந்த நேரத்­தில் மன­மு­டைந்த நிலை­யில் நடந்து போன முதி­ய­வர், கவ­ன­மின்றித் தரையைக் கவ­னிக்­காமல் காலடி எடுத்து வைத்திருக்­க­லாம்.

அத­னால் கால் வழுக்கி முதி­ய­வர் தரை­யில் விழுந்­த­தால் தலை­யில் அடி­பட்ட நிலை­யில், அவர் நீச்­சல் குளத்­தில் விழுந்­தி­ருக்க வாய்ப்­புண்டு என்று நீதி­பதி தீர்ப்பில் குறிப்­பிட்­டார்.

என்ன நிகழ்ந்­தது என்­பது யாருக்­கும் தெரி­யாது. அந்­தச் சம்­ப­வம் பிரத்­தி­யேக படச்­சா­த­னத்­தி­லும் பதி­வா­க­வில்லை என்­பதை நீதிபதி சுட்­டிக்­காட்­டி­னார்.

முதி­ய­வர் கவலை அடைந்து இருந்­தார். ஆனால் உயிரை மாய்த்­துக்கொள்­ளும் எண்­ணம் அவருக்கு இருந்­த­தா­கவும் தெரி­ய­வில்லை. பணிப்­பெண் முதி­ய­வரின் நடத்தை தொடர்­பில் தெரி­வித்த புகார் பற்­றிய விவ­ரங்­கள் எது­வும் நீதி­மன்ற ஆவ­ணத்­தில் இல்லை.

முதி­ய­வ­ரின் உடல் நீச்­சல் குளத்­தில் இருந்து மீட்­கப்­பட்ட பிறகு தட­ய­வி­யல் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அவர் மூழ்கி இறந்து­விட்­ட­தா­கத் தெரி­ய­வந்­தது.

மர­ணத்­தில் சூது இருப்­ப­தாகச் சந்­தே­கிக்­கப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!