$300,000 மின்னாவியாக்கிக் கருவிகள்; பகுதிப்பொருள் சிக்கின

$300,000 மின்னாவியாக்கிக் கருவிகள்; பகுதிப்பொருள் சிக்கின

2 mins read
0a78cde3-4989-49f1-be0f-e92d46f9e72c
-

துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் இந்த மாதத் தொடக்­கத்­தில் $300,000க்கும் அதிக மதிப்­புள்ள மின்­னா­வி­யாக்­கிச் சாத­னங்­களும் இதர உபகரணங்களும் அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கின.

அவை மலே­சி­யா­வில் பதி­யப்­பட்ட லாரி­களில் மறைத்­து­ வைக்­கப்­பட்டு இருந்­தன. தனித்­த­னி­யான மூன்று கடத்­தல் முயற்­சி­கள் முறி­ய­டிக்­கப்­பட்டு அவை கைப்­பற்­றப்­பட்­ட­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­ய­மும் அறி­வி­யல் சுகா­தார ஆணை­ய­மும் கூட்டு அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள், ஏப்­ரல் 5ஆம் தேதி­யும் 7ஆம் தேதி­யும் லாரி­களில் 1,200 மின்­னாவியாக்கி களை­யும் 49,000க்கும் மேற்­பட்ட மின்­னாவியாக்கி திரவக் குப்­பி­களை­யும் இடை­ம­றித்­த­னர்.

இந்த விவ­கா­ரம் புலன்­வி­சா­ர­ணைக்­காக அறி­வி­யல் சுகா­தார ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது. 21 வயது முதல் 51 வயது வரைப்­பட்ட ஐந்து மலே­சி­யர்­கள் விசா­ர­ணை­யில் உதவு­கி­றார்­கள்.

மின்­னா­வி­யாக்கி என்­பது ஒரு கருவி. அதில் ஆவியை வெளி­யிடும் கருவி, பேட்­டரி, ஒரு வகை 'மின் திர­வத்தை' அல்­லது சாற்றை நிரப்புவதற்­கான சிறிய குப்பி ஆகியவை இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் மின் சிக­ரெட்டு உட்­பட மின்­னா­வி­யாக்­கிக் கரு­விக்கு 2018 பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­த­கைய கரு­வி­களை இறக்­கு­மதி செய்­வது 2016 ஏப்­ரல் 1ஆம் தேதி முதல் சட்­ட­வி­ரோ­த­மா­னது.

ஷிஷா புகை­யிலை, புகை­வராத புகை­யிலை, மெல்­லக்­கூ­டிய புகை­யிலை, மின்­னா­வி­யாக்­கிக் கருவி, உதி­ரி­பா­கங்­கள் ஆகி­ய போலி புகை­யிலைப் பொருள்­களை இறக்கு­மதி செய்­வது, விநி­யோ­கிப்­பது, விற்­பது ஆகி­யவை புகை­யிலை (விளம்­பர, விற்­பனை கட்­டுப்­பாடு) சட்­டத்­தின்­கீழ் சட்ட விரே­ாத­மான செயல்­க­ளா­கும்.

இத்­த­கைய குற்­றச்செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு $10,000 வரை அப­ரா­தம், ஆறு­மா­தம் வரையிலான சிறைத்தண்­டனை அல்­­லது இரண்டும் விதிக்க முடி­யும். திரும்­பவும் இதே குற்­றத்­தைச் செய்­தால் தண்­டனை கடு­மை­யா­கும்.

மின்­னா­வி­யாக்­கிக் கரு­வி­கள் தொடர்­பான சட்­ட­வி­ரோ­த­மாக இறக்கு­மதி விநி­யோ­கம் விற்­பனை பற்றி யாருக்­கா­வது தக­வல் தெரிந்­தால் அவர்­கள் www.go.gov.sg/report tobaccooffences என்ற முக­வ­ரி­யில் தெரி­விக்­க­லாம்.

அல்­லது 6684-2036 அல்­லது 6684-2037 என்ற எண்­களில் தொடர்புகொள்­ள­லாம்.