போதைப்பொருளுக்கு எதிராக நாடு முழுவதும் அதிகாரிகள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை எடுத்த நடவடிக்கையில் 84 சந்தேகப் பேர்வழிகள் கைதாயினர்.
மொத்தம் 231 கிராம் ஹெராயின், 304 கிராம் ஐஸ், 36 கிராம் கட்டமைன், 113 எக்டசி மாத்திரைகள் உள்ளிட்ட பலவற்றையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு $70,000க்கும் அதிகம். கைதானவர்களிடம் புலன் விசாரணை தொடர்கிறது என்று இந்தப் பிரிவு கூறியது.

