சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கலாம்; ஆனால் நீண்டகாலத்திற்கான நிலையில் தெளிவு இல்லை

சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்கலாம்; ஆனால் நீண்டகாலத்திற்கான நிலையில் தெளிவு இல்லை

2 mins read
378cc4ec-4a85-43e4-ac20-8225490b7e47
-

சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று முன்­தினம் நாண­யக் கொள்­கையை இறுக்­கி­ய­தைத் தொடர்ந்து சிங்­கப்­பூர் வெள்ளியின் மதிப்பு இரண்டு வாரங்­களில் இல்­லாத அளவு அதி­க­மா­கப் பதி­வா­னது. வரும் வாரங்­க­ளி­லும் சிங்­கப்­பூர் வெள்ளி வலு­வாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனி­னும், இந்த ஆண்டு முற்­பா­திக்­குப் பிறகு வெள்­ளி­யின் நிலை குறித்து தற்­போது தெளிவு இல்லை. பிற்­கா­லத்­தில் பண­வீக்­கம் எந்த நிலை­யில் இருக்­கும் என்­பது தற்­போது தெரி­யா­தது, சிங்­கப்­பூ­ரின் முக்­கிய வர்த்­த­கப் பங்­காளி நாடான சீனா­வின் ரென்­மின்பி நாண­யம் வலு­வி­ழந்து இருக்­கக்­கூ­டிய சாத்­தி­யம் போன்­றவை, நீண்­ட­கா­லத்­தில் வெள்­ளி­யின் நிலை குறித்த தெளிவு தற்­போது இல்­லா­த­தற்­குக் கார­ணங்­க­ளா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

12 ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் மிக­வும் கடு­மை­யான முறை­களைக் கொண்டு நாணயக் கொள்கையை இறுக்கியது.

பண­வீக்­கத்­துக்­கான முன்­னு­ரைப்­பை­யும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் உயர்த்­தி­யுள்­ளது. இவ்­வாண்­டுக்­கான மூலா­தா­ரப் பண­வீக்­கம் 2.5லிருந்து 3.5 விழுக்­காட்­டுக்­குள் பதி­வா­கும் என்று ஆணை­யம் கணித்­துள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் இந்த விகி­தம் இரண்­டி­லி­ருந்து மூன்று விழுக்­காட்­டுக்­குள் இருக்கும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டது.

ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 4.5லிருந்து 5.5 விழுக்­காட்­டுக்­குள் பதி­வா­கும் என்­றும் கணிக்­கப்­பட்டுள்­ளது. முன்­ன­தாக இந்த விகி­தம் 2.5லிருந்து 3.5 விழுக்­காட்­டுக்­குள் இருக்­கும் என்று முன்னுரைக்கப்பட்டது.

எனி­னும், இவ்­வாண்­டுக்­கான மொத்த உள்­நாட்டு உற்­பத்தியின் வளர்ச்சி விகிதம் முன்­ன­தா­கக் கணித்­தி­ருந்­த­தைப் போல் மூன்­றி­லி­ருந்து ஐந்து விழுக்­காட்­டுக்­குள் பதி­வா­கும் என்று நாணய ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது.

நாண­யக் கொள்கை இறுக்­கப்­பட்ட பிறகு அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு 1.13510க்குக் கூடி­யது. கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதிக்­குப் பிறகு வெள்­ளி­யின் மதிப்பு இவ்­வ­ளவு வலு­வாக இருந்­தது இதுவே முதல்­முறை.

அதற்குப் பிறகு இறுதியில் வெள்ளியின் மதிப்பு மேலும் உயர்ந்து 1.3569ஆகப் பதிவானது.