ஷாங்காய்: அவசர உதவி அழைப்புகளுக்கு முன்னுரிமை

ஷாங்காய்: அவசர உதவி அழைப்புகளுக்கு முன்னுரிமை

1 mins read
fcaccdc2-51de-473f-a135-f05ac9a47839
-

ஷாங்­கா­யில் உள்ள சிங்­கப்­பூர் துணைத் தூத­ர­கத்­திற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரி­டம் இருந்து உத­வி­கேட்டு அழைப்­பு­கள் வரு­வ­தா­க­வும் அவ­சர உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக குழந்­தை­கள், வய­தா­ன­வர்­கள் அல்­லது கடு­மை­யான மருத்­து­வச் சிக்­கல் உடை­யோ­ரைக் கொண்ட குடும்­பங்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­விக்­குப் பதி­ல­ளித்த துணைத் தூத­ர­கத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

ஷாங்­கா­யில் வசிக்­கும் நூற்­றுக்­க­ணக்­கான சிங்­கப்­பூ­ரர்­கள் உத­வி­கேட்டு துணைத் தூத­ர­கத்தை நாடி­ய­தா­கத் தெரி­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பில் ஷாங்­காய் நக­ரில் நீடிக்­கும் முடக்­க­நிலை குறித்து அங்­குள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

உணவு, அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் கிடைப்­பது, ஒரு­வேளை நகரை விட்டு வெளி­யேற விரும்­பி­னால் விமான நிலை­யத்­துக்­குச் செல்ல இய­லுமா என்­பன போன்ற கவ­லை­களும் அவர்­க­ளி­டம் நில­வு­கின்­றன.