கோல்டன் மைல் வளாகத்துக்கு அருகே சண்டை, ஆடவர் நால்வர் கைது

கோல்டன் மைல் வளாகத்துக்கு அருகே சண்டை, ஆடவர் நால்வர் கைது

1 mins read
96ae5f11-98b1-449f-aaf5-15a479fd04f8
-

கோல்­டன் மைல் வளா­கத்­துக்கு அருகே நேற்று முன்­தி­னம் நடந்த சண்­டை­யின் தொடர்­பில் காவல்­துறை நான்கு ஆட­வர்­க­ளைக் கைது­செய்­துள்­ளது.

இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­யில், பீச் ரோட்­டில் ஆட­வர் கும்­பல் ஒன்று கைக­லப்­பில் ஈடு­பட்­ட­தைக் காண­மு­டி­கிறது.

புதன்­கி­ழமை பின்­னி­ரவு 2.40 மணி­ய­ள­வில் இது­கு­றித்­துத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது. இதன் தொடர்­பில், 22 வய­துக்­கும் 25 வய­துக்­கும் இடைப்­பட்ட நான்கு ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

சம்­பவ இடத்­தில் மருத்­துவ உத­வி­யா­ளர் ஆட­வர் ஒரு­வ­ரின் உடல்­நி­லை­யைச் சோதித்­த­தா­க­வும் அந்த ஆட­வர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­வதை விரும்­ப­வில்லை என்­றும் சிங்­கப்­பூர்க் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அமை­திக்கு ஊறு விளை­விக்­கும் வகை­யில் பொது இடத்­தில் சண்­டை­யிட்­ட­தாக வகைப்­ப­டுத்­தப்­பட்ட இந்­தச் சம்­ப­வம் குறித்­துக் காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.

கோல்­டன் மைல் வளாக வட்­டா­ரத்­தில் அடிக்­கடி இத்­த­கைய சண்டை நடப்­ப­தாக அங்­குள்ள வர்த்­த­கர்­கள் கூறு­கின்­ற­னர்.