பீச் ரோட்டில் மனைவியை வெட்டுக்கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவர்மீது நேற்று கொலைமுயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமை 41 வயது திருவாட்டி ஹான் ஹோங் லியை சீன நாட்டவரான அவரது 46 வயதுக் கணவர் செங் குவோயுவான் வெட்டுக்கத்தியால் தாக்கியதாகவும் சம்பவத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செங் காணொளி மூலம் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு மனநல மதிப்பீட்டிற்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார். விசாரணை மே 6ஆம் தேதி தொடரும்.