அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி பிரதமர் லீ சியன் லூங் தலைமையில் களமிறங்குமா அல்லது மசெகவின் 4ஆம் அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள லாரன்ஸ் வோங் தலைமையில் களம் காணுமா என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"இதன் தொடர்பில் லாரன்ஸ் வோங்குடன் நான் விவாதிப்பேன். அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்க தலைசிறந்த உத்தி என்ன என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம்," என்று திரு லீ குறிப்பிட்டார்.
என்றாலும் இது சூழ்நிலைகள் எப்படி பரிணமிக்கின்றன என்பதை பொறுத்து இருக்கும். இது பற்றி பின்னர் நாங்கள் முடிவு செய்வோம் என்று பிரதமர் திரு லீ குறிப்பிட்டார்.
"எப்படி இருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் மசெக வெற்றி பெறும்பட்சத்தில் லாரன்ஸ் வோங்தான் அடுத்த பிரதமர் என்பதே எங்கள் திட்டம்," என்றும் திரு லீ கூறினார்.

