லாரன்ஸ் வோங் பிரதமராக பதவி ஏற்பது எப்போது

2 mins read
f931ba17-90fb-473f-933d-21ea7357676c
-

பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்கு கடந்த பிப்­ர­வரி மாதம் 70 வய­தா­னது. அந்த வயதை எட்­டும்­போது பிர­த­மர் பத­வியை அடுத்­த­வ­ரி­டம் ஒப்­ப­டைத்­து­விட்டு அந்­தப் பத­வி­யிலிருந்து தான் வில­கி­வி­டப் போவ­தாக ஏற்­கெ­னவே திரு லீ கூறி இருந்­தார்.

பிறகு கொவிட்-19 தொற்று தலை­தூக்­கி­ய­தால் சிங்­கப்­பூர் வெற்­றி­க­ர­மான முறை­யில் அதைச் சமா­ளிப்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் தனது பதவி ஓய்வு திட்­டத்­தைத் தாம­தப்­ப­டுத்­தப் போவ­தாக திரு லீ தெரி­வித்து இருந்­தார்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நான்­காம் தலை­முறைத் தலை­வர் பத­வி­யில் இருந்து வில­கி­யதை அடுத்து அந்த அணி புதிய தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுக்கும் வரை தொடர்ந்து பத­வி­யில் இருந்து வரப்­போ­வ­தாக திரு லீ பிறகு குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் பொறுப்பை ஏற்க லாரன்ஸ் வோங் தயா­ரா­ன­தும் அதை அவ­ரி­டம் ஒப்­ப­டைக்க தான் ஆயத்­த­மாக இருப்பதாக நேற்று திரு லீ தெரி­வித்­தார்.

இதில் 2025ல் ஆம் ஆண்டுவாக்­கில் நடக்­க­வி­ருக்­கும் அடுத்த பொதுத் தேர்­தல் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டிய ஓர் அம்­சம் என்­பதை திரு லீ சுட்­டி­னார்.

தேர்­த­லுக்கு முன்பே பிர­த­மர் பொறுப்பை அவ­ரி­டம் ஒப்­ப­டைப்­பதா அல்­லது தன் தலை­மை­யில் தேர்­தலை எதிர்­கொண்டு வெற்றி பெற்ற பிறகு அந்­தப் பொறுப்பை லாரன்ஸ் வோங்­கி­டம் ஒப்­ப­டைப்­பதா என்­பது பற்றி அவ­ரு­டன் தான் விவா­திக்­கப் போவ­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

இதன் ­தொ­டர்­பில் அதே செய்தியாளர் கூட்டத்தில் கருத்து கூறிய திரு வோங், "பிரதமர் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருக்கும்போது அது பற்றி பிர­த­மரி­டம் நிச்­ச­யம் எடுத்­துச் சொல்­வேன்," என்­று தெரிவித்தார்.