ஈராண்டுகளில் நிறைவடையும் 'போல்டர்' தடுப்புத் திட்டம்

ஈராண்டுகளில் நிறைவடையும் 'போல்டர்' தடுப்புத் திட்டம்

1 mins read
d5a7c24c-3f2f-4d81-8980-b9e80bc631a4
உயரும் கடல் நீர் மட்டத்திலிருந்து பாதுகாக்க தெக்கோங் தீவில் 2024ஆம் ஆண்டுக்குள் தடுப்புகளை எழுப்பும் பணிகள் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. படம்: டெஸ்மண்ட் லீ / ஃபேஸ்புக் -

உயரும் கடல்நீர் மட்டத்திலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க தெக்கோங் தீவில் 'போல்டர் தடுப்புகளை எழுப்பும் பணிகள் பாதிக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

தடுப்புகளுக்கான பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை எழுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் முதன்முறையாக இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

'போல்டர்' தடுப்புகளுக்கான நிலம் தெக்கோங்கில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் திரு லீ சொன்னார். அந்த நிலத்தை வலுப்படுத்த அப்பகுதியில் மணலை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகிய இரண்டும் 2016ஆம் ஆண்டில் இத் திட்டம் குறித்து அறிவித்தன. 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் தடுப்புகள் முழுமையாக எழுப்பப்-படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.