உள்ளே செல்லக் கட்டுப்பாடுகள் உள்ள தெக்குக்கோர் தீவின் கடற்கரையில் நிறைய குப்பை சேர்ந்திருப்பதை அவ்வழியே செல்லும் படகோட்டிகள் சிலர் கண்டிருக்கின்றனர். குப்பையைத் தங்களால் அகற்றமுடியவில்லையே என்று அவர்களுக்கு இருந்த குறை தீர்ந்தது.
தெக்குக்கோர், லசாரஸ், செயின்ட் ஜான்ஸ் தீவுகளில் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று சுமார் 50 படகோட்டிகளில் ஈடுபட்டனர்.
'சிங்கப்பூர் பேடல் கிளப்' எனும் சிங்கப்பூர் படகோட்டிகள் சங்கம் இந்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளில் பிளாஸ்டிக், கடல் குப்பைகள் ஆகியவற்றைச் சுத்தம் செய்வது இதன் இலக்கு. இத்தகைய குப்பைகள் கடல் விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை.

