கொவிட்-19 கட்டுப்பாடுகளால் கடந்த ஈராண்டுகளாக கிறிஸ்துவர்களால் நேரில் சென்று ஈஸ்டர் வழிபாடுகளில் பங்கேற்கமுடியாமல் போனது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இவ்வாண்டு பலர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஈஸ்டர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
'செயின்ட் அல்ஃபோன்சஸ்' தேவாலாயத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஈஸ்டர் வழிபாடு நடைபெற்றது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அங்கு நேரில் சென்று பார்த்தபோது சுமார் 750 பேர் தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் தேவாலயத்திற்கு வெளியே அமர்ந்து வழிபாட்டின் நேரலையில் பார்த்தனர்.
வழிபாடு தொடங்குவதற்கு சுமார் அரை மணிநேரத்திற்கு முன்னரே 50க்கும் அதிகமானோர் தேவாலயத்திற்கு வெளியே திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
'வெஸ்லீ ெமத்தடிஸ்ட்' தேவாலயத்தில் நேற்று காலை எட்டரை மணி முதல் ஈஸ்டர் வழிபாடு தொடங்கியது. அதற்கான இடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிரம்பியிருந்தன.
குவீன் ஸ்திரீட்டில் உள்ள 'குட் ஷெப்பர்ட்' தேவாலயத்தில் நேற்று காலை எட்டரை மணிக்கும் ஈஸ்டர் வழிபாடுகள் நடைபெற்றன.
நேற்று மாலை ஆறு மணிக்கும் அங்கு மேலும் ஒரு ஈஸ்டர் வழிபாடு இடம்பெற்றது.
யூனோசில் உள்ள 'ஹார்ட் அஃப் காட்' தேவாலயத்தில் நேற்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு நடைபெற்ற வழிபாட்டுக்கு அனைத்து இடங்களும் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

