ரம்யாவின் ‘பவர்ட் பை பிளாண்ட்’

சிறு வய­தி­லி­ருந்தே விலங்­கு­களைப் பற்­றிய ஆவ­ணப்­ப­டங்­களை 24 வயது ரம்யா ரமேஷ் ரசித்­துப் பார்ப்­பா­ர். தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தில் பொரு­ளா­தா­ரத் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை முடித்த அவ­ருக்கு, சுற்றுச்சூழலைக் காப்­ப­தில் அதிக ஈடு­பாடு இருந்­த­தால் அது தொடர்­பான பணியை மேற்­கொள்ள விரும்­பி­னார்.

தமது பல்­க­லைக்­க­ழக நாள்­களில் வேலை அனு­ப­வப் பயிற்­சியை (Internship) 'பவர்ட் பை பிளாண்ட்' என்ற சிறிய நிறு­வனத்­தில் மேற்­கொண்­டார். சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்ற நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய வழி­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்தி அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட பணி­களை அவர் அங்கு­அறிந்­து­கொண்­டார். தானும் சமு­தா­யத்­திற்கு அதே­போல் பங்­க­ளிக்க வேண்­டும் என்று முடி­வெடுத்­தார்.

அவ்­வாறே 'பவர்ட் பை பிளாண்ட்' நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­னர் ஆனார்.

சரு­மத்­தைப் பரா­ம­ரிக்­கும் பொருள்­களை விற்­கும் அவ­ரது வர்த்­த­கம், விலங்­கு­க­ளால் பெறப்­பட்ட பொருள்­க­ளை­யும் விலங்­கு­க­ளின்­மீது சோதனை செய்­யப்­பட்ட பொருள்­க­ளை­யும் முற்­றி­லும் தவிர்க்­கிறது.

அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து தோலைப் பரா­ம­ரிக்­கும் நனி­சைவப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­கிறது, 'பவர்ட் பை பிளாண்ட்'.

தான் விற்­கும் பொருள்­களில் காப்பி எண்­ணெய்­யைக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட 'சீரம்', பல­ரா­லும் நாடப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். நனி­சை­வப் பொருள்­களை மட்­டுமே மக்­க­ளுக்­குக் கொண்டு சேர்ப்­ப­தற்­காக ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார் இளை­யர் ரம்யா.

தோலைப் பரா­ம­ரிக்­கும் நனி­சைவ அழ­குப் பரா­ம­ரிப்­புப் பொருள்­களை விற்­ப­து­டன் இன்று முழு நனி­சைவ வாழ்க்­கை­மு­றை­யை­யும் அவர் தழு­வி­யுள்­ளார்.

அவர் 2020ஆம் ஆண்­டில் இரைப்பை அழற்சி நோய் வந்த பிறகு நனி­சைவ உணவை மட்டுமே உண்­ணப் பழ­கிக்­கொண்­டார்.

இந்த வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க முத­லில் சவா­லாக இருந்­த­போ­தும் இன்று நனி­சைவ உணவை எப்­ப­டிச் சுவை­யா­கச் சமைக்­க­லாம் என்று தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் காணொளி வாயி­லாக மற்­றப் பய­னா­ளர்­க­ளிடம் இவர் பகிர்ந்து­வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!