மலேசியா அதன் எல்லைகளை முழுவதுமாகத் திறந்த பிறகு துப்புரவு ஊழியர்களுக்கான பற்றாக்குறை மோசமடைந்திருப்பதாகத் துப்புரவுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் புதிய வேலைகளை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. அல்லது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட வேலைகளைக் கைவிட நேரிடுகிறது என்று அவர்கள் கூறினர்.
தங்களிடம் வேலைபார்த்த மலேசியர்கள் தாயகம் திரும்பிவிட்டதால் 20 பேர் தேவைப்படும் துப்புரவுப் பணிக்கு ஏழு பேர் கிடைப்பதே சிரமமாக இருப்பதாக சில நிறுவனங்கள் கூறின. இதைச் சாக்காகக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு செலுத்தவேண்டிய துப்புரவுக் கட்டணங்களை இழுத்தடிப்பதாக அவை குறிப்பிட்டன.
மலேசியா, சீனா மட்டுமின்றி மற்ற வெளிநாடுகளில் இருந்தும் துப்புரவு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் அனுமதித்தால் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறினர்.