விரைவில் 3 வாரங்களில் 'விஇபி'அனுமதி

விரைவில் 3 வாரங்களில் 'விஇபி'அனுமதி

1 mins read
b7e915e5-7ad1-466b-be48-e0da78e599ab
-

வெளி­நா­டு­களில் பதி­வு­செய்­யப்­பட்ட வாக­னங்­களில் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய விரும்­பும் வாக­ன­மோட்­டி­கள் 'விஇபி' எனும் வாகன நுழைவு அனு­ம­தி­யைப் பெறக் காத்­தி­ருக்­கும் காலம் விரை­வில் குறை­ய­வி­ருக்­கிறது.

தற்­போது இதற்கு ஏழு வாரம் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. படிப்­ப­டி­யாக இதனை மூன்று வாரங்­க­ளுக்­குக் குறைக்க நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான நில எல்­லை­கள் இம்­மா­தம் 1ஆம் தேதி மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து, வாகன நுழைவு அனு­மதி கோரும் விண்­ணப்­பங்­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது.

ஏழு வாரம் காத்­தி­ருக்­க­வேண்­டும் என்று கூறப்­பட்­டா­லும் அதற்கு முன்­பா­கவே விண்­ணப்­பங்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு முடி­வு­கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

மார்ச் 31ஆம் தேதி முதல் இது­வரை ஏறத்­தாழ 50,000 விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு விண்­ணப்­பம் தொடர்­பான முடி­வு­கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணை­யம் கூறி­யது. மொத்த விண்­ணப்­பங்­களில் இது கிட்­டத்­தட்ட 40%. எஞ்­சிய விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு இன்­னும் மூன்று வாரங்­களில் முடி­வு­கள் தெரி­விக்­கப்­படும்.

பொழு­து­போக்­குக்­காக சிங்­கப்­பூர் வரு­வோர் பய­ணத் திட்­டங்­க­ளைத் தள்­ளிப் போடும்­படி ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யுள்­ளது. அத்­தி­யா­வ­சி­யத் தேவைக்­காக விண்­ணப்­பிப்­போர் இத­னால் பல­ன­டை­வர் என்­பதை அது சுட்­டி­யது.