நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சிங்கப்பூர் வருகை

நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சிங்கப்பூர் வருகை

2 mins read
da88ddd5-38a0-46e9-9afc-b9c9fce99e86
-

நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டன் (படம்), மூன்று நாள் அதி­கா­ரத்­து­வப் பய­ணம் மேற்­கொண்டு நேற்று சிங்­கப்­பூர் வந்­துள்­ளார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­னர் அவர் மேற்­கொள்­ளும் முதல் வெளி­நாட்­டுப் பய­ணம் இது.

நியூ­சி­லாந்­தின் பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்ற பிறகு இரண்­டா­வது முறை­யாக சிங்­கப்­பூ­ருக்கு வந்­துள்ள திரு­வாட்டி ஆர்­ட­னுக்கு, இஸ்­தா­னா­வில் இன்று அதி­கா­ர­பூர்வ வர­வேற்பு அளிக்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப், பிர­த­மர் லீ சியன் லூங் ஆகி­யோரை அவர் சந்­தித்­துப் பேசு­வார். பிர­த­மர் லீ அவ­ருக்கு இன்று மதிய விருந்­த­ளிப்­பார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி ஆர்­டனை கௌர­விக்­கும் வித­மாக புதிய வகை ஆர்க்­கிட் மல­ருக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­படும்.

பிர­த­மர் ஆர்­ட­னின் வருகை சிங்­கப்­பூ­ருக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடை­யி­லான உன்­ன­த­மான உறவை மறு­உ­று­திப்­ப­டுத்­து­வ­தாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு குறிப்­பிட்­டது.

நியூ­சி­லாந்­துப் பிர­த­ம­ரு­டன் அவ­ரது கண­வர் கிளார்க் கேஃபோர்ட், அந்­நாட்­டின் வர்த்­தக, ஏற்­று­மதி வளர்ச்சி அமைச்­சர் டேமி­யன் ஓ'கொன்­னர் மற்­றும் மூத்த அதி­கா­ரி­களும் வந்­துள்­ள­னர்.

நாளை திரு­வாட்டி ஆர்­டன் சிங்­கப்­பூர் பய­ணத்தை முடித்­துக்­கொண்டு ஜப்­பான் செல்­வார் என்று நியூ­சி­லாந்து அர­சாங்­கம் தெரி­வித்­தது.

முன்­ன­தாக, இந்தோ-பசி­பிக் வட்டாரத்தில் உள்ள பொரு­ளி­யல், பாது­காப்­புப் பங்­கா­ளித்­துவ நாடு­களான சிங்­கப்­பூர், ஜப்­பான் ஆகி­ய­வற்­று­டன் மீண்­டும் தொடர்பை ஏற்­றுக்­கொள்­வது தமது பய­ணத்­தின் இலக்கு என்று திரு­வாட்டி ஆர்­டன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதற்கு முன்­னர் 2019ஆம் ஆண்டு அவர் இங்கு வந்­தி­ருந்­த­போது உரு­வாக்­கப்­பட்ட சிங்­கப்­பூர்-நியூ­சி­லாந்து மேம்­பட்ட பங்­கா­ளித்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் இந்த பய­ணம் அமைந்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

வர்த்­த­கம், பொரு­ளி­யல், தற்­காப்பு, பாது­காப்பு, அறி­வி­யல், தொழில்­நுட்­பம், புத்­தாக்­கம் ஆகி­ய­வற்­றில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வ­து­வ­தும் இரு­நாட்டு மக்­க­ளி­டையே தொடர்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தும் இந்த மேம்­பட்ட பங்­கா­ளித்­து­வத்­தின் நோக்­கம்.

இருநாட்டு கல்வி அமைச்­சு­களும் தத்­தம் கல்­வி­முறை தொடர்­பான தக­வல்­க­ளைப் பரி­மா­றிக்­கொள்ள இது வகை­செய்­கிறது.

2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 12ஆம் தேதி­யில் இருந்து சிங்­கப்­பூ­ருக்­கும் நியூ­சி­லாந்­துக்­கும் இடை­யில் பய­ணம் செய்­யும் இரு நாட்­டுக் குடி­மக்­களும் தானி­யக்க முறை­யில் குடி­நு­ழை­வுச் சோத­னை­களை முடித்­துக்­கொள்­ள­வும் இந்த மேம்­பட்ட பங்­கா­ளித்­து­வம் வகை­செய்­கிறது.