டான் டோக் செங் மருத்துவமனை யில் புதுப்பிக்கப்பட்டுள்ள மறுவாழ்வு நிலையம், அதிகரித்து வரும் மருத்துவ தேவைகளைச் சமாளிக்க கைகொடுக்கும்.
குறிப்பாக, சிங்கப்பூரின் மூப்
படையும் மக்கள்தொகை மற்றும் உடற்குறைப் பிரச்சினைகளைக் கையாள இது உதவும்.
ஏறக்குறை 20,000 சதுர அடி பரப்பளவில் புதுப்பிக்கப்பட்டுள்ள நவீன மறுவாழ்வு சிகிச்சை மருந்தகம் இதற்கு முன்னர் இருந்த அளவைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது.
வழக்கமான சிகிச்சைக் கருவி களுடன் இயந்திர மனிதனும் இதில் பயன்படுத்தப்படும். குணமடையும் நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவும்.
பெரிய அளவில் உருவாகி உள்ள இந்தப் புதிய நிலையத்திற்கு ஆண்டுக்கு 13,000 நோயாளிகள் வரை வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
2020ஆம் ஆண்டு, புதுப்பித்தலுக்கு முன்னர் 5,400 நோயாளி களும் 2019ஆம் ஆண்டு 8,000 நோயாளிகளும் இங்கு வந்தனர்.
சிங்கப்பூரின் மூப்படையும் மக்கள் தொகையைச் சமாளிக்க இதுபோன்ற மறுவாழ்வு நிலையங் களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக டான் டோக் செங் மருத்துவமனையின் மறுவாழ்வு மருந்துத் துறை தலைவர் டாக்டர் லோ யோங் ஜூ கூறினார்.
"மூப்படையும் மக்களுடன் உடற்குறை உள்ளோரும் அதிகரிப்பதால் அவர்கள் எல்லாருக்குமான மறுவாழ்வு வசதி தருவதில் சிரமம் இருந்தது. அதனால் வீட்டிலேயே தங்கவேண்டிய பலருக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.
"இப்போது பெரிய அளவில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இனி அவர்களுக்கும் சேவை அளிக்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
பக்கவாதம், மூளை பாதிப்பு மற்றும் முதுகுத்தண்டு காயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிலையம் கையாள்கிறது.
புதிய நிலைய தொடக்க நிகழ்வில் பேசிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், அரசாங்கத்தின் அதிநவீனத் தொழில்நுட்பத்திற்கு இணையாக கடப்பாடு கொண்ட மனிதவளம் மற்றும் சமூக ஆதரவு போன்றவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

