13 வயதுப் பையனை தாக்கிய குற்றத்திற்காக ஓங் எங் செங், 62, என்பவருக்கும் அவரது மகனான பெர்னார்ட் ஓங் வெய் ஃபெங், 31, என்பவருக்கும் தலா மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு இழப்பீடாக $60 வழங்கவும் உத்தரவிடப்பட்டது. 2019 டிசம்பர் 22 மாலையில் தோ பாயோ பலநோக்கு மண்டபத் தில் சிறுவன் தமது மூன்று நண்பர்களுடன் பந்து விளை யாடியபோது நடந்து சென்ற முதியவரான ஓங் அருகில் பந்து விழுந்ததைத் தொடர்ந்து ஓங் சினமுற்றார். மகனை அழைத்து வந்து இருவரும் சிறுவனைத் தாக்கினர். சிறு வனின் விவரங்கள் வெளி யிடப்படவில்லை.
சிறுவனைத் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை
1 mins read
-

