பீச் ரோடு தாக்குதலை நிறுத்த உதவியோருக்கு விருது

2 mins read
c37feeea-35eb-4b53-aca9-9828416b1dfd
-

பீச் ரோட்­டில் கடந்த வியா­ழக்­

கி­ழமை ஆட­வர் ஒரு­வர் தமது மனை­வியை வெட்­டுக்­கத்­தி­யால் தாக்­கி­ய­போது அந்­தக் கொடூ­ரச் சம்­ப­வத்­தைத் தடுக்க உத­வி­ய­தற்­காக ஒன்­பது ஆட­வர்­களை காவல்­துறை பாராட்டி விருது வழங்கியுள்­ளது.

அன்று மாலை ஸோங் ஹுவா ஸ்டீம்­போட் உண­வ­கம் அருகே தமது மனை­வியை அந்த ஆட­வர் சர­மா­ரி­யாக வெட்­டி­னார். அத­னைத் தொடர்ந்து அந்­தப் பெண் ரத்­தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தபடி உதவி கேட்டு அல­றி­னார். ஒன்­பது ஆட­வர்­களில் ஒரு­வ­ரான திரு வெய் சென் சியாங், 32, அச்­சம்­ப­வத்தை நினை­வு­கூர்ந்­தார்.

"என்­னைக் காப்­பாற்­றுங்­கள், காப்­பாற்­றுங்­கள். என் கை போய்­விட்­டது," என்ற அல­றல் சத்­தத்­தைத் தாம் கேட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் நேற்று அவர் கூறி­னார்.

ஸோங் ஹுவா ஸ்டீம்­போட் உண­வ­கத்­தின் சமை­ய­ல­றை­யில் பணி­யாற்­றிய அவர், பெண்­ணின் கூக்­கு­ர­லைக் கேட்டு அவ­ரைத் தாக்­கிக்­கொண்­டி­ருந்த கண­வன் மீது நாற்­கா­லியை வீசி­னார். இதர எட்­டுப் பேரும் கையில் கிடைத்த பொருள்­களை அந்த ஆட­வர் மீது வீசி­னர். அரு­கி­லி­ருந்த உண­வ­கங்­கள் மற்­றும் குத்­தகை நிறு­வ­னப் பணி­யா­ளர்­கள் அவர்­கள். பொருள்­கள் அடுத்­த­டுத்து வீசப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஆட­வர் அங்­கி­ருந்து ஓடி­விட்­டார்.

பின்­னர் மாலை 5.30 மணி­ய­ள­வில் காவல்­து­றை­யி­னர் வரும் வரை அந்­தப் பெண்­ணைச் சுற்றி பாது­காத்து அவர்­கள் நின்­ற­னர். தாக்­கப்­பட்ட ஹான் ஹோங்லி, 41, என்ற அந்­தப் பெண் காய­முற்ற தமது கையைத் தாங்­கிப் பிடித்­த­வாறு இருந்­தார். டேசர் கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி ஆட­வரை காவல்

­து­றை­யி­னர் பிடித்­த­னர். சம்­ப­வம் குறித்து காவல்­துறையை அழைத்த பல­ரில் ஒரு­வ­ரான திரு­வாட்டி டோ லீ குவீ என்­ப­வ­ரை­யும் நேற்று காவல்­து­றை­யி­னர் பாராட்­டி­னர்.

"பெண்­ணின் காயத்­தைக் கண் டதும் பயந்­து­விட்­டேன். ஆனா­லும் அந்த நேரத்­தில் யோசிக்க நேர மில்லை. மீண்­டும் அப்­பெண்ணை அவ­ரது கண­வர் நெருங்­கி­வி­டாத வாறு நாங்­கள் பார்த்­துக்கொண் டோம்," என்று மாண்­ட­ரின் மொழி யில் திரு வெய் கூறி­னார்.

திரு­வாட்டி டோ உள்­பட 10 பேருக்­கும் பொது­நல ஊக்க உணர்வு விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வு மத்­திய காவல்­துறை பிரிவு அலு­வ­ல­கத்­தில் நேற்று நிகழ்ந்­தது.

கைது செய்­யப்­பட்ட செங் குயோ­யு­வான், 46, மீது கொலை­மு­யற்சி குற்­றம் சுமத்­தப்­பட்­டது. இவ­ரும் இவ­ரது மனை­வி­யும் மருத்­து­வ­

ம­னை­யில் சிகிச்சை பெறுவதாக அறி­யப்­ப­டு­கிறது.