பருவநிலை மாற்றம், பசுமை பொருளியலில் கூடுதல் ஒத்துழைப்பு: சிங்கப்பூர், நியூசிலாந்து

பருவநிலை மாற்றம், பசுமை பொருளியலில் கூடுதல் ஒத்துழைப்பு: சிங்கப்பூர், நியூசிலாந்து

1 mins read
bfc70d0e-c08c-4789-90f9-1186bd28aeda
படங்கள்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

நியூசிலாந்தும், சிங்கப்பூரும் பசுமை பொருளியல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் அணுக்கமாக ஒத்துழைக்கும் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு பிரதமர்களும் கலந்துகொண்ட செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு லீ, பருவநிலை மாற்றத்தை இரு நாடுகளுமே ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகக் கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூருக்கு வருகையளித்துள்ளார். கொவிட்-19 சூழ்நிலையில் அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது.

தொற்றுக் காரணமாக இரு நாடுகளுடைய எல்லைகள் மூடப்பட்டிருந்தபோது, பிரதமர் லீ தமக்கு தொலைபேசி வழி அழைத்து பேசியதற்கு திருவாட்டி ஆர்டன் நன்றி தெரிவித்தார்.

நீடித்து நிலைக்கும் போக்குவரவு, கரியமிலச் சந்தைகள், கழிவுப்பொருள் நிர்வாகம், சுத்தமான எரிசக்தி போன்றவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் என திரு லீ குறிப்பிட்டார்.

பிரதமர் லீயைச் சந்திக்கும் முன்னர் அதிபர் ஹலிமா யாக்கேப்பை திருவாட்டி ஆர்டன் சந்தித்து பேசினார்.

முன்னதாக திருவாட்டி ஆர்டனைக் கௌரவிக்க ஒரு புதிய ஆர்க்கிட் மலருக்கு அவருது பெயர் சூட்டப்பட்டது.