மீண்டும் களைகட்டும் இரவு நேர, 'கரவோக்கே' கேளிக்கை

மீண்டும் களைகட்டும் இரவு நேர, 'கரவோக்கே' கேளிக்கை

2 mins read
9523dba0-ed36-457a-b688-14bd1e029cad
'தியோ ஹெங்' கரவோக்கே கூடத்தில் பொழுதைக் கழித்த தொடக்கக் கல்லூரி மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் நேற்று முதல் இரவு நேர கேளிக்கை நிலை­யங்­கள் மீண்­டும் இயங்­க­த் தொடங்கின. மது­பானக் கூடங்­கள், 'கர­வோக்கே' கூடங்கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

குடும்­பத்தார் ஒன்­று­கூட தோதான 'கரவோக்கே' கூடங்­களை இயக்­கும் 'தியோ ஹெங் கேடிவி' நிறு­வ­னத்­திற்கு வர்த்­த­கம் மீண்­டும் சூடு­பி­டித்­துள்­ளது. நேற்று முதல் அதன் கூடங்­க­ளுக்கு மாண­வர்­கள், திரு­ம­ண­மான தம்­ப­தி­யி­னர் உள்­ளிட்­டோர் திர­ளாக வரத் தொடங்­கி­னர்.

சிலர் வேலை­யி­லி­ருந்து ஓய்­வெ­டுத்­துக்­கொண்­டும் அங்கு சென்றதாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

'தியோ ஹெங்' நிறு­வ­னத்­திற்கு சன்­டெக் சிட்டி நிலை­யத்­தில் 19 'கர­வோக்கே' கூடங்­கள் உள்­ளன. வரும் ஜூன் மாதம்­வரை அவை அனைத்­துக்­கும் பதிவு முடிந்­து­விட்டது. நீண்­ட­கா­ல­மாக 'கர­வோக்கே' கூடங்­கள் இயங்­கா­மல் இருந்­தது மக்­க­ளி­டம் இப்­ப­டிப்­பட்ட அமோ­க­மான வர­வேற்பு இருப்­ப­தற்­குக் கார­ணம்.

'ஜேகி­யூப்' கடைத்­தொ­கு­தி­யில் உள்ள 'தியோ ஹெங்'கின் எல்லா 'கர­வோக்கே' கூடங்­க­ளுக்­கும் மே மாதம்­வரை வார இறுதி நாள்­களுக்கும் விடு­முறை நாள்­களுக்கும் மக்­கள் பதி­வு­செய்­துள்­ளனர். இதர பகு­தி­களில் இருக்­கும் அந்­நி­று­வனத்­தின் 'கர­வோக்கே' கூடங்­களுக்­கும் மக்­கள் வேகமாகப் பதிவு­செய்து வரு­கின்­ற­னர்.

அதி­க­ரித்­துள்ள வாடகை போன்ற கார­ணங்­க­ளால் 'கர­வோக்கே' கூடங்­க­ளுக்­குப் பதி­வு­செய்­வ­தற்­கான விலை 50 விழுக்­காட்­டுக்­கும் மேல் கூடி­யது. ஆனா­லும் மக்­க­ளி­டம் உள்ள ஆர்­வத்­துக்­குக் குறை­வில்லை.

ஒரு கூடத்தின் பரப்பளவைப் பொறுத்து அங்கு 10 பேர் வரை இருக்கலாம்.

'கரவோக்கே' கூடங்­கள், மது­பா­னக் கூடங்­கள் ஆகி­யவை சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன் இயங்க இப்­போது அனு­மதி உண்டு. முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான மாறு­பட்ட விதிமு­றை­க­ளைச் செயல்­ப­டுத்­து­வது கட்­டுப்­பா­டு­களில் ஒன்று.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­போ­தும் முன்­பைப்­போல் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­போ­வ­தில்லை என்று சில மது­பா­னக் கூடங்­கள் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தன.

நட­ன­மா­டு­வது அத்­த­கைய நட­வடிக்­கை­களில் ஒன்று.