பொம்மைத் துப்பாக்கியை வைத்து திருடியதாக ஆடவர் மீது சந்தேகம்

பொம்மைத் துப்பாக்கியை வைத்து திருடியதாக ஆடவர் மீது சந்தேகம்

1 mins read
4cfb9d33-1cd0-42ff-bda9-c788f20fe1a6
ஹாங்காங்கில் பொம்மை துப்பாக்கியைக் கொண்டு ஒரு வங்கியில் திருடியதாக 73 வயது சிங்கப்பூரர் மீது சந்தேகம். படம்: 'சேனல் சி ஹெச் கே' / யூடியூப் -

ஹாங்­காங்­கில் துப்­பாக்­கி­யைக் கொண்டு வங்­கி­யில் திரு­டி­ய­தாக 73 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார். அவர் சுமார் 2,400 வெள்­ளிப் பணத்­தைத் திருடி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

திரு­டிய பிறகு அந்த ஆட­வர் பொதுப் பேருந்­தில் தப்­பி­யோ­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சுமார் ஏழு மணி­நே­ரத்­திற்­குப் பிறகு அவர் பிடி­பட்­டார்.

திரு­டி­ய­தா­க­வும் அனு­மதி வழங்­கப்­பட்ட காலத்­தைத் தாண்டி ஹாங்­காங்­கில் இருந்­த­தா­க­வும் சந்­தேக நபர் மீது இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக ஹாங்­காங் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று பிற்­ப­கல் 3.40 மணி­ய­ள­வில் காவ்­லூன் பகு­தி­யில் நேத்­தன் ரோட்­டில் இருக்­கும் வங்கி ஒன்­றில் திருட்டு நிகழ்ந்­த­தா­கத் தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­த­தென காவல்­து­றை­யி­னர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தனர். துப்­பாக்­கி­யைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்­துக்­கொண்டு சந்­தேக நபர் தப்­பி­யோ­டி­ய­தாக வங்கி ஊழி­யர்­கள் கூறி­னர். சுமார் 1.7 மீட்­டர் உய­ரம் இருக்­கும் சந்­தேக நபர் வலு­வான உடல்­வா­கைக் கொண்­ட­வர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்­ப­வத்­தில் யாரும் காய­ம­டை­ய­வில்லை என்று ஹாங்காங் காவல்துறை தெரி­வித்தது.