தரைவழி பாதைகளில் 436,000 பயணிகள்

தரைவழி பாதைகளில் 436,000 பயணிகள்

1 mins read
9a550f6e-72ac-4885-8a98-3c7d76fb4f0e
-

புனித வெள்­ளிக்­கி­ழமை வார இறுதி­யில் சிங்­கப்­பூ­ர்-மலே­சி­ய தரை­வழி எல்­லை­களில் சுமார் 436,000 பேர் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர். இந்த எண்­ணிக்கை, அதற்கு முந்தைய வார இறு­தி­யில் பதி­வா­ன­தை­விட கிட்­டத்­தட்ட 25 விழுக்­காடு அதி­கம்.

சென்ற வாரம் புனித வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முதல் நாளான வியாழக்­கி­ழ­மை­யன்று உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டிக்கு வெளியே பலர் நீண்ட வரி­சை­யில் நிற்­கத் தொடங்­கி­னர். அன்று மட்­டுமே குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் 112,700 பய­ணி­க­ளின் விண்­ணப்­பங்­க­ளைக் கையாண்­டது.

இம்­மா­தம் முதல் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களுக்­கு சிங்­கப்­பூர்-மலே­சிய எல்­லை­கள் முழு­மை­யா­கத் திறக்­கப்­பட்­டன. அதற்­குப் பிறகு புனித வெள்­ளிக்­கி­ழமை வார இறு­தி­யில்­தான் ஆக அதி­க­மா­னோர் தரை­வழி எல்­லை­க­ளில் பய­ணம் மேற்­கொண்­டதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

புனித வெள்­ளிக்­கி­ழ­மைக்­கும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் மொத்­தம் 242,500 பேர் ஜோகூர் கடற்­பா­லம் அல்­லது துவாஸ் இரண்­டாம் இணைப்­பின் வழி­யா­கப் பய­ணம் மேற்­கொண்­ட­னர் என்று குடி­நுழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­தது.