டெங்கிக்கு இதுவரை தடுப்பூசி இல்லை

டெங்கிக்கு இதுவரை தடுப்பூசி இல்லை

2 mins read
fb5c8dd8-21a6-4ab0-8f13-cf7091f139f8
-

உல­கெங்­கும் மில்­லி­யன்­ க­ணக்­கா­னோர் டெங்­கித் தொற்­றுக்கு ஆளா­கிச் சிர­மப்­ப­டு­கின்­ற­னர்; சிலர் உயி­ரி­ழக்­கின்­ற­னர்.

பல்­லாண்­டுகளாக மக்­களை நோய்க்கு ஆளாக்­கி­வ­ரும் இந்­தக் கிருமி 1943ல் அடை­யா­ளம் காணப்­பட்­டது. இருந்­த­போ­தும் இன்­னும் இதற்­கான தடுப்­பூ­சியோ டெங்கி வரா­மல் தடுப்­ப­தற்­கு­ரிய குறிப்­பிட்ட சிகிச்­சை­மு­றையோ கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­பதே உண்மை.

உல­க­ள­வில் நூற்­றுக்­கும் அதி­க­மான நாடு­களில் டெங்கி பர­வி­யுள்­ளது என்­றார் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மருத்­துவ இணைப் பேரா­சி­ரி­யர் கெவின் டான்.

டெங்­கிக் கருத்­த­ரங்­கில் உரை­யாற்­றிய அவர், ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய நூறு மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­களில் 70 விழுக்காட்டினர் ஆசி­யா­வில் உள்­ள­னர் என்­றும் குறிப்­பிட்­டார்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தடுப்பு மருந்­து­களோ தடுப்பு மருத்­து­வ­மு­றையோ இல்­லா­த­தன் கார­ணத்­தை­யும் வல்­லு­நர்­கள் விளக்­கி­னர். டெங்­கிக் கிருமி நான்கு வகைப்­ப­டு­வ­தால் ஒரே தடுப்பு மருந்து அனைத்­தை­யும் தடுக்க இய­லாது.

மேலும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பிரி­வி­ன­ரான குழந்­தை­கள், முதி­யோர், உடல் எதிர்ப்­புச் சக்தி இல்­லா­தோர் ஆகி­யோரே டெங்­கித் தொற்­றுக்கு ஆளா­கின்­ற­னர்.

தடுப்பு மருந்து அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பா­னதா என்­ப­தைச் சோதிக்­கவே காலம் பிடிக்­கும் என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

முக்­கி­ய­மாக தொடக்­கத்­தி­லேயே டெங்­கிக்கு சிகிச்­சை அளிக்­கப்­பட்­டால்­தான் பல­ன­ளிக்­கும் என்று வல்­லு­நர்­கள் கூறி­னர்.

பெரும்­பா­லான நோயா­ளி­கள் கிருமி தொற்­றிய மூன்று அல்­லது நான்­கா­வது நாளில்­தான் மருத்­து­வரை நாடு­கின்­ற­னர்.

தடுப்பு மருந்­து­களை முத­லில் எலி உள்­ளிட்ட விலங்­கு­களில் சோதிப்­பது வழக்­கம். ஆனால் டெங்கி விலங்­கு­களை கடு­மை­யாக பாதிப்­ப­தில்லை.

இத்­த­கைய சில கார­ணங்­க­ளால் டெங்­கிக்­கான தடுப்­பூ­சி­யைக் கண்­டு­ பிடிப்­ப­தில் சிக்­கல் நில­வு­கிறது.