ஒரே வாரத்தில் பதிவான 736 டெங்கிச் சம்பவங்கள்

ஒரே வாரத்தில் பதிவான 736 டெங்கிச் சம்பவங்கள்

2 mins read
6bff85b4-0e0d-480e-99ec-fdb18e7b330e
நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூ­ரின் 159 இடங்­கள் டெங்கி பர­வும் அபா­யம் ­மிக்­க­வை­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மொத்­தம் 736 டெங்­கி சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2020ஆம் ஆண்டு செப்­டம்­ப­ருக்­குப் பிறகு பதி­வான ஆக அதிக எண்­ணிக்கை அது. 2020 ஆகஸ்ட் 30 முதல் செப்­டம்­பர் 5ஆம் தேதி வரை­யி­லான ஒரு வார காலத்­தில் 937 டெங்­கி சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

சென்ற ஆண்டு ஏப்­ரல் 11 முதல் 17 வரை­யி­லான கால­கட்­டத்­தில் பதி­வான டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 112.

சிங்­கப்­பூ­ரில் டெங்­கிப் பர­வல் தற்­போது கடு­மை­யாக இருப்­ப­தா­க­வும் இந்த ஆண்டு மிகப் பெரிய டெங்­கிப் பர­வல் ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யம் இருப்­ப­தா­க­வும் தேசி­ய சுற்­றுப்­புற வாரியம் தெரி­வித்­தது.

வழக்­க­மாக ஜூன் மாதத்­தில் இருந்து அக்­டோ­பர் மாதம் வரை­யி­லான காலத்­தில்­தான் டெங்­கிப் பர­வல் இங்கு உச்­சத்தை எட்­டும். இருப்­பி­னும் இந்த ஆண்டு தொடக்­கத்­தில் இருந்தே தொடர்ந்து டெங்கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­து­ வ­ரு­வதை வாரியம் சுட்­டி­யது.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூ­ரின் 159 இடங்­கள் டெங்கி பர­வும் அபா­ய­மிக்­க­வை­யாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவற்­றில் 33 இடங்­களில் பத்­துக்­கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி­யில் இருந்து ஏப்­ரல் 16ஆம் தேதி வரை மொத்­தம் 4,700க்கும் மேற்­பட்ட டெங்­கிச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அடுத்து வரும் மாதங்­களில் இந்த எண்­ணிக்கை மிக­வும் உய­ரக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படு­வ­தாக தேசி­ய சுற்­றுப்­புற வாரியம் குறிப்­பிட்­டது.

டெங்­கிப் பர­வல் கடு­மை­யா­ன­தற்கு மூன்று முக்­கி­ய கார­ணங்­களை­யும் அது கூறி­யது.

முத­லா­வது, தற்­போது நில­வும் மித­மான வெப்­பம், மழை, காற்­றில் ஈரப்­ப­தம் ஆகி­ய­வற்­றால் ஏடிஸ் கொசுக்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­தி­ருக்­கக்­கூ­டும்.

இரண்­டா­வ­தாக, சிங்­கப்­பூ­ரில் இதற்கு முன்­னர் அதி­கம் காணப்­படாத 'செரோ­டைப் 3' வகை டெங்­கிக் கிரு­மி­யும் இங்கே பரவி வரு­கிறது.

மூன்­றா­வ­தாக கணி­ச­மா­னோர் இன்­னும் வீட்­டில் இருந்தே வேலை செய்­கின்­ற­னர். பகல் நேரங்­க­ளில்­தான் ஏடிஸ் கொசுக்­க­ளின் நட­மாட்­டம் அதி­கம் என்­ப­தால் இது­வும் டெங்­கிப் பர­வ­லுக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இதனை முன்­னிட்டு அதி­கா­ரி­கள் டெங்­கிப் பர­வ­லைத் தடுக்­கும் முயற்­சி­களை மேற்­கொள்­கின்­ற­னர். சீனப் புத்­தாண்­டுக்கு முன்­பாக தாவ­ரப் பரா­ம­ரிப்பு குறித்த பிர­சார இயக்­கத்தை நடத்­தி­ய­து­டன் இந்த ஆண்­டின் டெங்­கித் தடுப்பு பிர­சார இயக்­கத்தை முன்­கூட்­டியே தொடங்­கி­னர். சமு­தாய அள­வில் விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­ப­தில் அமைப்­பு­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­வர்­கள் எனப் பல தரப்­பி­ன­ரும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

டெங்­கித் தடுப்­பில், கட்­டு­மா­னம், பூச்­சிக்­கொல்லி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் தேசிய சுற்­றுப்­புற வாரியம் இணைந்து செயல்­ப­டு­கிறது. ஏடிஸ் கொசுக்­கள் அதி­கம் காணப்­படும் பகு­தி­களில் ஊதா நிறப் பதா­கை­களும் அறி­மு­கம்­ செய்­யப்­பட்­டுள்­ளன.

ஏடிஸ் கொசுக்­க­ளின் இனப் பெருக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் 'புரோ­ஜெக்ட் வோல்­பாக்­கியா' திட்­டம் இந்த மாத இறு­திக்­குள் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளின் 19 விழுக்­காட்­டுப் பரப்­பிற்கு விரி­வு­ப­டுத்­தப்­படும்.

இத்­த­கைய தொடர்ச்­சி­யான முயற்­சி­க­ளால் இந்த ஆண்டு மிகப் பெரிய அள­வில் டெங்­கிப் பர­வல் ஏற்­ப­டா­மல் தடுக்க இய­லும் என்று கரு­தப்­ப­டு­கிறது.