மலேசியாவில் கால் பதிக்கும் சிங்கப்பூரின் 'சிட்டி எனர்ஜி'

மலேசியாவில் கால் பதிக்கும் சிங்கப்பூரின் 'சிட்டி எனர்ஜி'

2 mins read
c923aacf-9874-41a2-b9d5-39113659ef79
செங்காங்கில் அமைக்கப்பட்டிருக்கும் 'கோ' மின்னூட்டும் வசதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் எரி­வாயு விநி­யோ­கம் செய்­யும் 'சிட்டி எனர்ஜி' நிறு­வ­னம், மலே­சி­யா­வில் புதி­தா­கத் தொடங்­கப்­பட்­டுள்ள 'இவி கனெக்­‌ஷன்' நிறு­வ­னத்­து­டன் இணைந்து கார்­க­ளுக்கு மின்­னூட்­டம் செய்­யும் இடங்­களை அமைக்­க­வி­ருக்­கிறது.

'கோ' எனப்­படும் இத்­த­கைய மின்­னூட்ட இடங்­கள் ஜோகூர் முதல் பினாங்கு வரை அமைக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர், மலே­சிய மின்-கார் உரி­மை­யா­ளர்­கள் பொது­வான செயலி மூலம் இந்த இடங்­களில் மின்­னூட்­டம் செய்­ய­லாம்.

கடன் பற்று அட்டை மூலம் கட்­ட­ணத்­தைச் செலுத்­தும் வச­தி­யும் உண்டு.

சிங்­கப்­பூ­ரின் செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள பார்க் போட்­டா­னியா கூட்­டு­ரிமை வீட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள மின்­னூட்­டும் இடம் இந்த மாதம் செயல்­ப­டத் தொடங்­கும் எனத் தெரி­விக்­கப்­படுகிறது.

மரின் பரேட் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த ஓல்­லோய் கூட்­டு­ரிமை வீட்­டில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் மற்­றொரு மின்­னூட்­டும் இடம் அடுத்த மாதம் செயல்­ப­டத் தொடங்­கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் சிங்­கப்­பூ­ரின் பத்­துக்­கும் மேற்­பட்ட கூட்­டு­ரிமை வீடு­களில் 'கோ' மின்­னூட்­டும் இடங்­கள் அமைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

மலே­சி­யா­வில் தற்­போது 20 இடங்­களில் இத்­த­கைய மின்­னூட்ட வச­தி­கள் சேவை வழங்­கி­ வ­ரு­கின்­றன. இந்த ஆண்டு இறு­திக்­குள் மேலும் 50 மின்­னூட்­டும் இடங்­கள் அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

தனி­யார் குடி­யி­ருப்­பு­களில் மின்­னூட்ட வசதி அமைப்­ப­தில் கவ­னம் செலுத்­தப்­படும் என்­றார் 'சிட்டி எனர்ஜி' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி பெர்ரி ஓங். இத்­த­கைய இடங்­களில் கார் உரி­மை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என்­றார் அவர்.

'சிட்டி கேஸ்' என்று முன்­னர் அழைக்­கப்­பட்ட 'சிட்டி எனர்ஜி' நிறு­வ­னம் 161 ஆண்டு பழ­மை­யான் வாய்ந்­தது.

தற்­போது அது மின்­னூட்­டும் துறை­யி­லும் கால் பதித்­துள்­ளது.