கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கறி ஞர்களுக்கான தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து 11க்கு அதிகரித்துள்ளது.
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று இந்த விவரத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
2020 பகுதி 'பி' தேர்வுகளில் மோசடி செய்த விண்ணப்பதாரர் களின் மேலும் ஐந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரு வதாகவும் அவர் சொன்னார்.
தேர்வில் ஏமாற்றிய பயிற்சி வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை ஏற்க ஆட்சேபம் தெரிவிப்பது இதுவே முதல் முறை என்று அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இத்தகைய விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்று வற்கு பொருத்தமானவர்கள் அல்லர் என தலைமைச் சட்ட அலுவலகம் கருதியது. ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் இருக்க வேண்டிய நேர்மை, கௌரவம் ஆகிய முக்கிய பண்புகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்களுடைய தவறான நடத்தை காட்டு வதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்வில் ஏமாற்றிய ஆறு பேரின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் நாளேடு தெரிவித்தது. வாட்ஸ்ஆப் மூலம் விடைத்தாள்களை பரிமாறிக் கொண்ட ஐவர் மறுபடியும் தேர்வு எழுத வேண்டும். எஞ்சிய ஒருவர், மற்றொருவருடன் சேர்ந்து மூன்று தேர்வுத் தாள்களில் மோசடி ெசய்து உள்ளார். இதனால் பகுதி 'பி' என்று அழைக்கப்படும் முழுத் தேர்வை அவர் மீண்டும் எழுத வேண்டும்.

